க்ஷிதி மோகன் சென்
க்ஷிதி மோகன் சென் (Kshiti Mohan Sen, பி. டிசம்பர் 2, 1880 - மார்ச் 12, 1960) ஒரு வங்காள அறிஞர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். நாட்டாரியலில் பல ஆய்வுகள் செய்ததோடு ரபீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் கல்விக் கூடத்தில் சமற்கிருந்த பேராசிரியாகவும் பணியாற்றினார். இந்து சமயம், இந்திய பண்பாடு குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சென் இந்தியாவின் தொன்மையான கல்வி மையமாக திகழ்ந்த வாரணாசியில் பாரம்பரீய சமஸ்க்ருத கல்வியை கற்றார். சமஸ்க்ருதம் மட்டும் அல்லாது பல இந்திய மொழிகளிலும் நல்ல தேர்ச்சியுடன் திகழ்ந்தார் .மிக இளம் பிராயத்திலேயே இந்தியாவின் பல்வேறு மத நூல்களில் நுண்ணிய புலமையை அடைந்தார். பின்னர் அவரது பார்வை நாட்டாரியல் இலக்கியங்கள் மற்றும் கிராமீய வாழ்க்கைமுறை நோக்கியும் திரும்பியது .வெறும் வாய்மொழியாகவே வழிவழியாக வழக்கில் இருந்த பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு தேசங்களில் பாடப்பட்ட பாடல்களையும் கவிதைகளையும் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, அப்படைப்புகளை சேகரித்து மிகுந்த நேர்த்தியோடு தொகுத்தளித்தார். கபீர், தாது மற்றும் பல பக்தி இயக்க காலகட்டத்து படைப்புகள் மற்றும் பெங்காலிய பால் குழுவினரின் பாடல்களை வெளி உலகிற்கு கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்கு மகத்தானது. நாட்டாரியல் தவிர்த்து இந்து மதம் சார்ந்து அதன் பல்வேறு தளங்களை தொட்டு பல முக்கியமான நூல்களை எழுதினார். இந்திய ஜாதிகளின் அமைப்புகள் குறித்தும் ,பண்டைய இந்திய நாகரீகத்தில் பெண்களின் நிலை போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை .
19ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் சென் தாகூருடன் இணைந்து சாந்திநிகேதனில் ஒரு சர்வதேசிய பண்பாட்டு மையத்தை உருவாக்க உதவினார். மார்ச் மாதம் 1960 ஆண்டில் அவர் உயிர் துறக்கும் வரையில் சாந்திநிகேதனிலேயே வாழ்ந்து ,அதன் வளர்ச்சிக்கு செம்மையாக பணியாற்றினார்.
சென்னின் பேரன் அமர்த்தியா சென் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Kshitimohan Sen (1880-1960) பரணிடப்பட்டது 2012-05-28 at the வந்தவழி இயந்திரம்