கௌதாரிமுனை
Appearance
கௌதாரிமுனை
Kowtharimunai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°35′N 80°5′E / 9.583°N 80.083°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | பூநகரி |
கௌதாரிமுனை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது பூநகரிக்குத் வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கௌதாரிமுனை மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பாகும்.
சிறப்பு
[தொகு]கௌதாரிமுனை 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரதேசம் ஆகும்.[2] இவ்வூரில் வாழ்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக அயல் நாடுகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.[2] இங்குள்ள வெள்ளை மணல் மேடுகளே கடல் நீர் உள்லே வராமல் பாதுகாக்கின்றன.[3]
இங்குள்ள பாடசாலைகள்
[தொகு]- கௌதாரிமுனை அரசுத் தமிழ்க் கலவன் பாடசாலை
இங்குள்ள கோவில்கள்
[தொகு]- கௌதாரிமுனை விநாயகர் ஆலயம்[2]
- கௌதாரிமுனை பட்டிவைரவர் கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 2.2 கௌதாரிமுனை சொல்லும் கதை!, பதிவு, 28 திசம்பர் 2021
- ↑ கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா?