கௌஃப்மான் ஒலிபீனேற்றம்
கௌஃப்மான் ஒலிபீனேற்றம் (Kauffmann olefination) என்ற வினையின் மூலம் ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையும் விளிம்பில் மெத்திலீன் குழுவைக் கொண்ட ஒலிபீன்களாக மாற்றலாம். செருமானிய வேதியியலாளர் தாமசு கௌஃப்மான் கண்டறிந்த காரணத்தால் இவ்வினை கௌஃப்மான் ஒலிபீனேற்றம் என அழைக்கப்படுகிறது. டெப்பி ஒலிபீனேற்றம், விட்டிக் வினை போன்ற வினைகளுடன் இவ்வினையும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
இவ்வினைக்கான வினைப்பொருளை மாலிப்டினம் அல்லது தங்குதன் ஆலைடுகளுடன் தாழ் வெப்பநிலையில் (−78 °செல்சியசு) மெத்தில்லித்தியம் சேர்த்து தளத்திலேயே உருவாக்கப்படுகிறது[1][2][3][4]
.
வினைக்குத் தயாராகும் செயல்முறையின் போது செயல்திறனுள்ள வினைப்பொருள் தோன்றுகிறது. இது சுக்ராக் கார்பீனல்ல (எ.கா. டெப்பி-வினைப்பொருள்) என்று அணுக்கரு காந்த ஒத்ததிர்வு சோதனைகள் தெரிவிக்கின்றன.
வினைவழிமுறை
[தொகு]வளையக் கூட்டு மற்றும் வளைய நீக்க வினை படிநிலை வரிசையில் ஒலிபீனேற்ற செயல்முறை நிகழ்வதாக வினைவழிமுறை சோதனைகள் கூறுகின்றன.
பயன்பாடுகள்
[தொகு]நீண்ட காலமாக செயற்கை கரிம வேதியியலில் இச்சேர்மத்தின் பயன்பாடு ஏதும் அறியப்படாமல் இருந்தது. 2002 ஆம் ஆண்டு டெர்பீன் கிளினால் தயாரிப்பிற்கான ஒட்டுமொத்த தொகுப்பு வினையில் மிதமான மற்றும் காரமல்லா வினைப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது[5]. ஓருலைச் செயல்முறையில் ஒலிபீன் சீரிடம்பெயர் படிநிலையுடன் கிரப்சு வினையூக்கியுடன் இதுவும் பயன்படுகிறது[6]. கனிம வேதியியல் வினை விளைபொருள்களையும் இந்த கரிமவுலோக வினையூக்கி சகித்து ஏற்றுக் கொள்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ T. Kauffmann; M. Papenberg; R. Wieschollek; J. Sander (1992). "Organomolybdän- und Organowolfram-Reagenzien, II. über den carbonylolefinierenden μ-Methylenkomplex aus Mo2Cl10 und vier äquivalenten Methyllithium". Chem. Ber. 125: 143–148. doi:10.1002/cber.19921250123.
- ↑ T. Kauffmann; P. Fiegenbaum; M. Papenberg; R. Wieschollek; D. Wingbermühl (1993). "Organomolybdän- und Organowolfram-;Reagenzien, III. Chemoselektive, nichtbasische Carbonylmethylenierungs-;Reagenzien aus MoOCl3(THF)2 und MoOCl4: Bildung, Thermolabilität, Struktur". Chem. Ber. 126: 79–87. doi:10.1002/cber.19931260114.
- ↑ T. Kauffmann; J. Braune; P. Fiegenbaum; U. Hansmersmann; C. Neiteler; M. Papenberg; R. Wiescholleck (1993). "Organomolybdän- und Organowolfram-;Reagenzien, IV. über die Chemoselektivität des carbonylmethylenierenden Reagenzes aus 2 MoOCl3(THF)2 und 4 CH3Li". Chem. Ber. 126: 89–96. doi:10.1002/cber.19931260115.
- ↑ T. Kauffmann (1997). "Neue Reaktionen molybdän- und wolframorganischer Verbindungen: Additiv-reduktive Carbonyldimerisierung, spontane Umwandlung von Methyl- in μ-Methylenliganden und selektive Carbonylmethylenierung". Angew. Chem. 109 (12): 1312–1329. doi:10.1002/ange.19971091205.
- ↑ K. Oesterreich; D. Spitzner (2002). "Short total synthesis of the spiro[4.5]decane sesquiterpene (−)-gleenol". Tetrahedron 58 (21): 4331–4334. doi:10.1016/S0040-4020(02)00336-8.
- ↑ K. Oesterreich; I. Klein; D. Spitzner (2002). "'One-pot' Reactions: Total Synthesis of the Spirocyclic Marine Sesquiterpene, (+)-Axenol". Synlett: 1712–1714. doi:10.1055/s-2002-34211.