உள்ளடக்கத்துக்குச் செல்

கோஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோஷா
சுய தரவுகள்
பிறப்பு
இந்தியா
சமயம்இந்து சமயம்
குறிப்பிடத்தக்க ஆக்கம்அசுவினி குமாரர்களைப் போற்றி ரிக்வேதத்தில் இரண்டு பாடல்கள்
அறியப்படுதல்கவிதைகள்
வேறு பெயர்(கள்)பிரம்மவாதினி, பிரம்மாவின் அறிவிப்பாளர்
Occupationமதத் தத்துவவாதி

கோஷா ( சமக்கிருதம்: घोषा ) ஒரு பண்டைய வேத கால இந்திய பெண் தத்துவவாதி ஆவார். சிறுவயதிலிருந்தே, தோல் வியாதியால் அவர் பாதிக்கப்பட்டார். அது அவரைச் சிதைத்தது. அசுவுனி குமாரர்கள் அவரை குணப்படுத்தி அவரது இளமை, ஆரோக்கியம் மற்றும் அழகை மீட்டெடுத்தார்கள். இதன் விளைவாக, அவர் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார். அவர் வேதங்களில் புலமை பெற்றிருந்தாரென்றும் ரிக்வேதத்தில் இரண்டு பாடல்களை எழுதினார் என்றும் கூறப்படுகிறது. [1] மந்திரங்களை நன்கு அறிந்தவர் என்ற பொருளில் அவள் மந்திரத்ரிகா என்றும் அழைக்கப்பட்டார். [2] அவர் ஒரு பிரம்மவாதினி அல்லது பிராமணத்தின் பேச்சாளர் அல்லது பிரகடனர் என்றும் அறியப்பட்டார். மேலும் ஒரு கூர்நோக்கையுடைய ஆன்மீக வாழ்க்கையை அவர் நடத்தினார். [3]

சுயசரிதை

[தொகு]

கோஷா இந்தியாவில் வேத காலத்தில் பிறந்தார். இவரது தந்தை காக்ஷிவத் மற்றும் தாத்தா திர்கதாமஸ் இருவரும் ரிக்வேதத்தில் பாடல்களை எழுதியுள்ளனர். தோல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் தங்கி தந்தைக்குச் சிகிச்சை அளித்தார். ஒரு பாடலின் படி, தொழுநோயால் பாதிக்கப்பட்டார். [3] இதனால் இவர் நீண்ட காலம் திருமணமாகாத கன்னிப் பெண்ணாகவே இருந்தார். புத்துயிர் தருவதில் தேர்ச்சி பெற்ற அக்கால தெய்வீக மருத்துவ இரட்டையர்களான அசுவினிகளிடம் இவர் உருக்கமாக பிரார்த்தனை செய்தார். அவர்கள் இளமையை மீட்டெடுக்கவும், அபரிமிதமான அறிவைப் பெறவும், தோல் நோயைக் குணப்படுத்தவும் இவருக்கு மது வித்யா என்னும் ஒரு வேத போதனையை, இரகசிய விஞ்ஞானத்தைக் கற்பித்தார்கள். தொடர்ச்சியான பிரார்த்தனையின் காரணமாக அசுவினி குமாரர்கள் இவரது தோல் பிரச்சனையை குணப்படுத்தி அவளது அழகை மீட்டெடுத்தனர். அதன் பின்னர் இவருக்குத் திருமணம் நடந்தது. சுஹஸ்தியா என்ற மகனும் பிறந்தார். சுஹஸ்தியா ரிக்வேதத்தில் ஒரு பாடலையும் இயற்றினார். [3] [4]

அசுவினி குமாரர்களைப் புகழ்ந்து கோஷா ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் (புத்தகம்), அத்தியாயம் 10ல் பாடல்கள் 39 மற்றும் 40 ஆன 14 வசனங்களைக் கொண்ட இரண்டு சூக்தங்களை ( கீதங்களை ) இயற்றினார். முதல் பாசுரம் அசுவினிகளைப் போற்றுகிறது. இரண்டாவது பாடல் அவரது அந்தரங்க உணர்வுகளையும் திருமண வாழ்க்கைக்கான விருப்பங்களையும் வெளிப்படுத்தும் தனிப்பட்ட ஆசையாகப் பாடப்பட்டிருக்கின்றது. [5] [6] [7] [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. name="Grand">"Ghosha". Indian Scripture.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015."Ghosha". Indian Scripture.com. Retrieved 7 December 2015.
  2. Singh 2008.
  3. 3.0 3.1 3.2 "Ghosha". Indian Scripture.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  4. Vivekananda 1954.
  5. Prabhu 1991.
  6. "Women In Ancient India". Ghosha. Indic Studies Foundation. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  7. Pandey 2008.
  8. "The Rig Veda".

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஷா&oldid=3666805" இலிருந்து மீள்விக்கப்பட்டது