கோல் அணை
கோல் அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | கோலணை நீர்மின் உற்பத்தித் திட்டம் |
நாடு | இந்தியா |
அமைவிடம் | பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்) மற்றும் மண்டி மாவட்டம் |
புவியியல் ஆள்கூற்று | 31°22′59″N 76°52′16″E / 31.38306°N 76.87111°E |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 2000 |
திறந்தது | 2015 |
உரிமையாளர்(கள்) | தேசிய அனல் மின் நிறுவனம் |
அணையும் வழிகாலும் | |
வகை | கட்டுக்கரை, பாறைகள் கொண்டது |
உயரம் (அடித்தளம்) | 167 m (548 அடி) |
உயரம் (தல்வேக்) | 153 m (502 அடி) |
நீளம் | 474 m (1,555 அடி) |
உயரம் (உச்சி) | 648 m (2,126 அடி) |
அகலம் (உச்சி) | 14 m (46 அடி) |
கொள் அளவு | 12,000,000 m3 (15,695,407 cu yd) |
வழிகால் வகை | ஆறு மதகுகள் |
வழிகால் அளவு | 16,500 m3/s (582,692 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 560,000,000 m3 (453,999 acre⋅ft)[1] |
அதிகபட்சம் நீளம் | 40 km (25 mi) |
இயல்பான ஏற்றம் | 642 m (2,106 அடி)[2] |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 2015[3] |
ஹைட்ராலிக் ஹெட் | 144 m (472 அடி) (static) |
சுழலிகள் | 4 x 200 வாட்டு (அலகு) Francis-type |
நிறுவப்பட்ட திறன் | 800 மெகாவாட் |
கோல் அணை அல்லது கோலணை நீர்மின் உற்பத்தித் திட்டம் (ஆங்கில மொழி: KolDam) என்பது சத்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கட்டுக்கரை அணையாகும். இது இமாச்சல் பிரதேச பிலாஸ்பூர் சண்டிகார்-மணாலி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (என்எச்-1) 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நீர்மின் உற்பத்திக்காக தேசிய அனல் மின் நிறுவனத்தால் கட்டப்பட்டது.[4]
வரலாறு
[தொகு]2000 ஜூன் 5 ஆம் நாள் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அடிக்கல் நாட்டினார். 2004 ஜனவரி நான்காம் நாள் கட்டுமானங்கள் தொடங்கின. தேசிய அனல் மின் நிறுவனத்தால் (என்.டி.பி.சி.) கட்டப்பட்ட முதல் அணை இதுவாகும்.[2][5] காடு இழப்பு மற்றும் மறுகுடிபெயர்வு காரணங்களால் இத்திட்டம் தாமதமாகியது. மாற்று கால்வாய்களின் சிக்கல்களால் 2013 டிசம்பரில் இதன் நீர் தேக்கு முயற்சிகள் தோல்வியடைந்தன. தொடர்ந்து நான்காவது முயற்சியில் 2014 மார்ச் 18 இல் வெற்றிகரமாகக் கால்வாய்களைத் தடுத்து நீர் தேக்கப்பட்டது.[6] 2014 ஏப்ரலில் ஏற்பட்ட நீர்க்கசிவால் மீண்டும் நீரைத் தேக்கமுடியாமல் போனது.[7] பின்னர் 2014 நவம்பர் 3 தொடங்கி, 2015 ஜனவரி 3 வரை சீரமைப்புப் பணி நடைபெற்று, சரி செய்யப்பட்டது. கால்வாய்களில் சிறிய கசிவு இருந்தாலும் அதிகாரிகளின் உத்திரவாதத்தில் ஏப்ரலில் நீர்மின் நிலையம் செயல்படத் தொடங்கியது.[8] 2009 இல் மின்னாக்கி இயங்கும் வகையில் திட்டமிட்டிருந்தாலும் 2015 இல் தான் செயல்படத் தொடங்கியது.[3][9][10] இதன் நீர்த் தேக்கம் உயரம் 642 அடி ஆகும்.
மின்சார உற்பத்தி
[தொகு]அலகுக்கு 200 மெகாவாட் வீதம் நான்கு அலகுகளில் மொத்தம் 800 மெகாவாட் கொள்ளளவு கொண்டது. முதல் 200 மெகாவாட் பிரான்சிஸ் டர்பின் மின்னாக்கி 2015 மார்ச் 30 ஆம் நாள் செயல்படத் தொடங்கியது.[11][12] இந்த அணையினால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் சண்டிகார் பகுதிகள் பலனடைகின்றன. ஹிமாச்சல் பிரதேசத்தின் 28% மின்சாரப் பயன்பாடு இதன் மூலமே கிடைக்கிறது.[5] 2019 ஜனவரியில் இவ்வணையில் கூடுதலாகப் பதினைந்து மேகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதத்தில் மிதக்கும் சூரிய மின்தகடுகள் பதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.[13]
அலகு எண் | கொள்ளளவு (வாட்டு (அலகு)) | திறக்கப்பட்ட ஆண்டு | நிலை |
---|---|---|---|
1 | 200 | 31 மார்ச் 2015 | செயல்படுகிறது[14] |
2 | 200 | 30 மார்ச் 2015 | செயல்படுகிறது |
3 | 200 | 10 ஏப்ரல் 2015 | செயல்படுகிறது |
4 | 200 | 12 ஜூன் 2015 | செயல்படுகிறது |
மொத்தம் | 800 |
சுற்றுலாத் தலம்
[தொகு]பாறைகள் மற்றும் பசுமை சூழ்ந்த அணையாக இருப்பதால் இது சுற்றுலாத் தலமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, மாநில சுற்றுலாத் துறையினர் தட்டபணி முதல் கோல் அணை வரை நீர்வழிப் போக்குவரத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.[15] மேலும் ஏரியையும், ஆற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.
சுற்றுச்சூழல் சர்ச்சை
[தொகு]சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 2005 இன் படி குறைந்தது 15% நீர் நீர்வாழ் உயிரினங்களின் நலனுக்காக வெளியேற்றப்பட வேண்டும். இதை மீறியதாக 2018 ஆண்டுவாக்கில் இதனை நிர்வகிக்கும் என்.டி.பி.சி.க்கு சுற்றறிக்கையினை ஹிமாச்சல் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியது.[16] வறட்சி காரணமாக வெளியேற்றும் நீர் குறைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அணையின் தரப்பினர் மறுத்துள்ளனர். அடுத்த ஆண்டே கனமழை பொழிந்தது அதன் காரணமாக 2019 ஆகஸ்ட் மாதத்தில் அணை நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.[17]
இவற்றையும் பார்க்க
[தொகு]- பக்ரா அணை – கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Heard, S.P.; Gardron, P.; Senan, R.C.; Agarwal, M. "Koldam hydroelectric Project a new hydroelectric project on the Satluj river in India". பார்க்கப்பட்ட நாள் 23 November 2011.
- ↑ 2.0 2.1 "Kol Dam Hydro Electric Power Project". Italian-Thai Development PLC. Archived from the original on 3 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 23 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Kol Dam HEP commissioning now slated for 2013". Asian Power. 24 June 2011. பார்க்கப்பட்ட நாள் 23 November 2011.
- ↑ "BHEL starts NTPC's 800-MW Koldam hydro power plant - The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2016-01-09.
- ↑ 5.0 5.1 "NTPC signs MoU with HP to set up 520mw Hydro plants". https://economictimes.indiatimes.com/industry/energy/power/ntpc-signs-mou-with-hp-to-set-up-520mw-hydro-plants/articleshow/71295593.cms. பார்த்த நாள்: 22 October 2019.
- ↑ "Impounding of water in NTPC's Koldam hydel project begins". Power Business View. 18 March 2014 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407172127/http://powerbusinessview.com/index.php/component/k2/item/1024-impounding-of-water-in-ntpc-s-koldam-hydel-project-begins. பார்த்த நாள்: 1 April 2014.
- ↑ "NTPC conducts reservoir impounding for Kol dam project". The Times of India. 9 April 2014. http://timesofindia.indiatimes.com/india/NTPC-conducts-reservoir-impounding-for-Kol-dam-project/articleshow/33475119.cms. பார்த்த நாள்: 13 May 2014.
- ↑ "2nd phase of impounding over, but leakage continues". The Tribune. 12 January 2015. http://www.tribuneindia.com/news/himachal/2nd-phase-of-impounding-over-but-leakage-continues/28853.html. பார்த்த நாள்: 17 January 2015.
- ↑ "Koldam Project of NTPC suffers major setback in Himachal". Jagran Post. 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 23 November 2011.
- ↑ "800 MW Koldam project commissioning extended to April 2014". MoneyControl. 15 December 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
- ↑ "NTPC's First Hydropower Project Starts in Himachal". Press Trust of India. NDTV Convergence. 30 March 2015. http://profit.ndtv.com/news/corporates/article-ntpcs-first-hydropower-project-starts-in-himachal-750924. பார்த்த நாள்: 1 April 2015.
- ↑ "NTPC Ltd commissions Unit 3 of 200 MW of Koldam Hydro Power Project". Equity Bulls. 19 April 2015 இம் மூலத்தில் இருந்து 18 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150518071948/http://www.equitybulls.com/admin/news2006/news_det.asp?id=157904. பார்த்த நாள்: 13 May 2015.
- ↑ "Bid due date extended for 15 MW koldam floating solar PV project in Himachal Pradesh". https://renewablewatch.in/2019/05/03/bid-due-date-extended-15-mw-koldam-floating-solar-pv-project-himachal-pradesh/. பார்த்த நாள்: 22 October 2019.
- ↑ http://www.indiainfoline.com/article/news-top-story/bhel-commissions-4-sets-of-200-mw-each-at-koldam-hydro-electric-project-115061500230_1.html
- ↑ "Himachal to introduce water transport service through lakes". https://www.thestatesman.com/cities/himachal-introduce-water-transport-service-lakes-1502782754.html. பார்த்த நாள்: 22 October 2019.
- ↑ "Kol Dam project marred by controversy, yet again". https://www.tribuneindia.com/news/himachal/kol-dam-project-marred-by-controversy-yet-again/557362.html. பார்த்த நாள்: 22 October 2019.
- ↑ "Rain fury in HP, dams near full". https://www.tribuneindia.com/news/himachal/rain-fury-in-hp-dams-near-full/818926.html. பார்த்த நாள்: 22 October 2019.