உள்ளடக்கத்துக்குச் செல்

கோல்ன் கதீட்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கொலோன் கதீட்ரல்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iv
உசாத்துணை292
UNESCO regionஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1996 (20வது தொடர்)

கொலோன் நகரின் கதீட்ரல் (Cologne Cathedral, ஜேர்மன்: Kölner Dom) என்பது ஜேர்மனியின் கொலோன் நகரில் உள்ள கத்தோலிக்க ஆயரின் இருப்பிடமாகும். இது கோல்ன் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும். இத்தேவாலயம் புனித பேதுரு மற்றும் கன்னி மரியாள் ஆகியோரின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இத்தேவாலயம் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் கட்டிடக் கலைக்கும் கோதிக் கட்டிடக்கலைக்கும் இது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. உலகின் பெரிய கிறித்தவத் தேவாலயங்களில் இதுவும் ஒன்று. 1880-84 காலப்ப்பகுதியில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகவும் இது இருந்தது. இதன் கட்டிட வேலைகள் 1248 இல் ஆரம்பித்திருந்தாலும் 1880இலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது 144.5 மீட்டர்கள் நீளமானதும், 86.5 மீ அகலமானதும் ஆகும். இதன் இரண்டு கோபுரங்களும் 157 மீ உயரமாகும்.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "கொலோன் கதீட்ரல் இணையதளம்". Archived from the original on 2016-06-13. பார்க்கப்பட்ட நாள் 2007-08-13.

படத்தொகுப்பு

[தொகு]


சாதனைகள்
முன்னர் உலகின் மிக உயரிய கட்டமைப்பு
1880–1884
157.38 மீ
பின்னர்
உலகின் மிக உயரிய கட்டிடம்
1880–1890
157.38 மீ
பின்னர்
ஐரோப்பாவின் மிக உயரிய கட்டிடம்
1880–1890
157.38 m


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ன்_கதீட்ரல்&oldid=3552264" இலிருந்து மீள்விக்கப்பட்டது