கோலி நடனம்
Appearance
கோலி நடனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களின் பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும். இது மும்பையைச் சேர்ந்த கோலி என்னும் மீனவ இனமக்களால் உருவாக்கப்பட்டது.[சான்று தேவை] அவர்களின் கடலோடு இணைந்த வாழ்கை முறையை சித்தரிக்கும் பொருட்டு கோலி நடனம் கடல் அலைகளின் தாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் கோலிகளின் அனைத்து திருவிழாக்களிலும் எப்போதும் கோலி நடனம் இல்லாமல் கொண்டாடப்படுவதேயில்லை கோலி மீனவப் பெண்களின் இந்த விறுவிறுப்பான நடனம் மும்பைக்கு மற்றுமொரு சிறப்பாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
[தொகு]- 1961 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தினத்தன்று, மகாராஷ்டிராவின் கோலி இன மக்கள் (மகாராஷ்டிரா 1960 இல் புதிதாக உருவாக்கப்பட்டது) குடியரசு தின அணிவகுப்பில் டெல்லியில் கோலி நடனத்தை நிகழ்த்தினார். பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது தலையில் கோலி இன மக்களைப்போல தொப்பியைக் கூட வைத்துக்கொண்டு அவர்களுடன் இணைந்து நடனமாடினார் [1]
- நவம்பர் 2010 இல், அமெரிக்க ஜனாதிபதி, பராக் ஒபாமா தனது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவிற்கு வருகை தந்த போது மும்பையில் பள்ளி மாணவர்களுடன் கோலி நடனம் ஆடியதுடன் 'மி ஹை கோலி' என்ற பாடலையும் கண்டு ரசித்தார். [2]
மேலும் பார்க்கவும்
[தொகு]- கோலி மக்கள் பட்டியல்
- கோலி மாநிலங்கள் மற்றும் குலங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fernandes, Naresh. "When Bandra's Kolis danced in the Republic Day parade (and what that has to do with a Bollywood hit)". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
- ↑ "How a Koli tune got the Obamas to groove". www.mid-day.com (in ஆங்கிலம்). 2015-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.