கோலா மிளகாய்
கோலா மிளகாய் | |
---|---|
![]() கோலா மிளகாய் | |
இனம் | கேப்சிகம் அன்னுவம் |
தோற்றம் | கோவா, இந்தியா |
கோலா மிளகாய் (Khola chilli) என்பது இந்திய மாநிலமான கோவாவில் முக்கியமாக வளர்க்கப்படும் ஒரு வகை மிளகாய் ஆகும்.[1][2]
பெயர்
[தொகு]கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள கனகோனாவில் அமைந்துள்ள கோலா கிராமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டதால் இம்மிளாய்க்கு கோலா மிளகாய் எனப் பெயரிடப்பட்டது.
உள்ளூர் பெயர்
[தொகு]இது உள்ளூரில் கோலா மிர்சங் என்று அழைக்கப்படுகிறது. கோவா மாநில மொழியான கொங்கணியில் மிர்சங் என்றால் மிளகாய் என்று பொருள்.
விளக்கம்
[தொகு]கோலா கிராமத்தின் மலைச்சரிவுகளில் பிரத்தியேகமாக வளர்க்கப்படும் கோலா மிளகாய் இதன் ஈர்ப்பான சிவப்பு நிறம், நீளமான நீண்ட வடிவத்தால் பிற மிளகாய்களிலிருந்து வேறுபடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இது மிதமான அளவிலான காரத்தன்மையைக் கொண்டுள்ளது. இது தனித்துவமான சுவையுடன் மயக்கும் நறுமணத்தைக் கொண்டுள்ளது.[3] குறிப்பிடத்தக்க வகையில், இது மாங்காய் ஊறுகாய், சட்னி, மீன் உணவு போன்ற பல்வேறு இந்தியச் சமையல் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
கோலா மிளகாய் ஓர் உழவர் தாவர வகையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணைய தாவர வகைகள் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட கோவாவிலிருந்து இந்தியாவின் முதல் உழவர் தாவர வகையாகும்.[4]
புகைப்பட தொகுப்பு
[தொகு]சோலியம், கோலாவைச் சேர்ந்த சுவிதா ஜராவுங்கரின் (கோலா மிளகாய் விவசாயி) பண்ணையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.[5]
-
விவசாய பண்ணையில் கோலா மிளகாய் செடி
-
கோலா மிளகாய் - சிவப்பு நிறத்தில் பழுத்த நிலையில்
-
கோலா மிளகாய்
-
சிவப்பு கோலா மிளகாய்
புவியியல் குறிப்பு
[தொகு]கோலா மிளகாய்க்கு 28 ஆகத்து 2019 அன்று 5 ஆகத்து 2028 வரை செல்லுபடியாகும் புவிசார் குறியீடானது இந்திய அரசினால்புவிசார் குறியீடுகள் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்டது.[6][7][8]
கனகோனாவைச் சேர்ந்த கோலா/கனகோனா மிளகாய் சாகுபடியாளர் குழு சங்கம், கோலா மிளகாயின் புவிசார் குறியீடு பதிவிற்கு முன்மொழிந்தது. ஏப்ரல் 2019-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, மிளகாய்க்கு 2019-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புவியியல் அடையாளப் பதிவேட்டில் புவிசார் குறியீடு பதிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் விளையும் மிளகாய்களுக்கு "கோலா மிளகாய்" என்று பிரத்தியேகமாகப் பெயர் வந்தது. இது கோவாவிலிருந்து முதல் மிளகாய் வகையாகவும், கோவாவிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற 2ஆவது பொருளாகவும் ஆனது.[9][10]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Variyar, Prasad S.; Singh, Inder Pal; Adiani, Vanshika; Suprasanna, Penna (8 November 2024). Peppers: Biological, Health, and Postharvest Perspectives (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-1-040-15384-0. Retrieved 6 November 2024.
- ↑ Raj, Ashok. Magical Minds and Magical Hands All the Handicrafts and Handlooms Of Madhya Pradesh (in ஆங்கிலம்). True Sign Publishing House. ISBN 978-93-5988-684-8. Retrieved 6 November 2024.
- ↑ Sen, Colleen Taylor; Bhattacharyya, Sourish; Saberi, Helen (23 February 2023). The Bloomsbury Handbook of Indian Cuisine (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. ISBN 978-1-350-12864-4. Retrieved 6 November 2024.
- ↑ "Khola Chilli Receives Goa's First Farmer Plant Variety Registration from PPV&FRA". Indian Council of Agricultural Research. Retrieved 24 September 2024.
- ↑ "Contact List of Khola Chilli Growers" (PDF). India Brand Equity Foundation. Retrieved 12 November 2024.
- ↑ "Geographical Indications Intellectual Property India". Retrieved 24 September 2024.
- ↑ Ravindran, P. N.; Sivaraman, K.; Devasahayam, S.; Babu, K. Nirmal (2024). Handbook of Spices in India: 75 Years of Research and Development (in ஆங்கிலம்). Springer Nature. ISBN 978-981-19-3728-6. Retrieved 6 November 2024.
- ↑ Mukherjee, Soumya; Mukherjee, Piyali; Aftab, Tariq (18 August 2023). Crop Sustainability and Intellectual Property Rights (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-1-000-86428-1. Retrieved 6 November 2024.
- ↑ Barua, Ananya (14 March 2022). "Mirchi Map of India: 5 GI-Tagged Indian Chillies Famous For Their Flavour". The Better India. Retrieved 24 September 2024.
- ↑ Ltd, Infokerala Communications Pvt (1 September 2023). Kerala Tradition & Fascinating Destinations 2023 (in ஆங்கிலம்). Infokerala Communications Pvt Ltd. ISBN 978-93-91760-65-6. Retrieved 6 November 2024.