உள்ளடக்கத்துக்குச் செல்

கோர்சுபீல்டு மர மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்சுபீல்டு மர மூஞ்சூறு
Horsfield's treeshrew
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மர மூஞ்சூறு
குடும்பம்:
துபாலிடே
பேரினம்:
துபையா
இனம்:
து. சாவனிகா[2]
இருசொற் பெயரீடு
துபையா சாவனிகா[2]
கோர்சுபீல்டு, 1822
கோர்சுபீல்டு மர மூஞ்சூறு பரம்பல்

கோர்சுபீல்டு மர மூஞ்சூறு (Horsfield's treeshrew) என்பது சாவகம் மர மூஞ்சூறு என்று அழைக்கப்படும் துபையா சாவனிகா என்பது துபாயிடே குடும்பத்தில் உள்ள ஒரு மர மூஞ்சூறு சிற்றினமாகும். இது இந்தோனேசிய தீவுகளான சுமாத்திரா, பாலி, சாவகம் மற்றும் நியாசு தீவுகளில் காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது முதன்மைக் காடுகளில் வாழ்கிறது.[1]

கோர்சுபீல்டு மர மூஞ்சூறு முதன்முதலில் 1822-இல் தாமசுகோர்சுபீல்டால் விவரிக்கப்பட்டது. வண்ணமயமாக்கலின் மாறுபாட்டின் அடிப்படையில் பல துணையினங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.[3] இருப்பினும், நிறம் வேறுபடுத்திய அறிய உதவும் தனித்துவமான தன்மை இல்லை.[4]

நடத்தையும் சூழலியலும்

[தொகு]

கோர்சுபீல்டு மர மூஞ்சூறு பழங்கள் மற்றும் பூச்சிகளை உணவாகச் சாப்பிடுகிறது. அதே நேரத்தில் பெரும்பாலும் கணுக்காலிகளை உட்கொள்கிறது.[5] இது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதாலும் தாவர விதைகளைப் பரப்புவதாலும் சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது. கோர்சுபீல்டு மர மூஞ்சூறு வேளாண் காடுகளில் வாழும் வகையில் சிறப்புத் திறனைக் கொண்டுள்ளது[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Cassola, F. (2016). "Tupaia javanica". IUCN Red List of Threatened Species 2016: e.T41496A22280464. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41496A22280464.en. https://www.iucnredlist.org/species/41496/22280464. பார்த்த நாள்: 26 January 2022. 
  2. 2.0 2.1 Helgen, K.M. (2005). "Tupaia javanica". In Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 106. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. Horsfield, T. (1824). Zoological researches in Java, and the neighbouring islands. Kingsbury, Parbury, & Allen.
  4. Stone, R. D. (1995). Eurasian insectivores and tree shrews. IUCN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0062-0.
  5. Gartiwa, Gian; Damia, Ulfah; Megawati, Emilia; Pradipta, Stanislaus; Gunawan, Geraldus; Karnati, Srikanth; Wihadmadyatami, Hevi; Kusindarta, Dwi (29 August 2021). "Morphological characterization of Horsfield's treeshrewtupaia javanicalingual papillae: Light microscopy and scanning electron microscopy studies". Anatomia, Histologia, Embryologia 50 (5): 801–811. doi:10.1111/ahe.12724. பப்மெட்:34184774. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/ahe.12724. பார்த்த நாள்: 14 March 2023. 
  6. Campera, Marco; Hedger, Katherine; Birot, Hélène; Manson, Sophie; Balestri, Michela; Budiadi, Budiadi; Imron, Muhammad; Nijman, Vincent et al. (30 July 2021). "Does the presence of shade trees and distance to the forest affect detection rates of terrestrial vertebrates in Coffee Home Gardens?". Sustainability 13 (15): 8540. doi:10.3390/su13158540. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • விக்கியினங்களில் Tupaia javanica பற்றிய தரவுகள்