கோரம்
கோரம் (Quorum) சட்டப்படியான ஒரு நிறுவனத்தின் பொதுக்குழு அல்லது நிர்வாகக் குழு கூட்டங்களில், குழுவின் மொத்த உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் கலந்து கொள்வதை, சட்டப்படி அல்லது அரசாணையின்படி அல்லது அந்நிறுவனத்தின் துணை விதிகளில்[1] கூறப்பட்டிருக்கும்.[2][3]
குறிப்பிட்ட தொகை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத கூட்டத்தை, உடனடியாகக் கூட்டத் தலைவர் வேறு கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும். கோரம் இல்லாத கூட்டத்தில் தீர்மானங்களைக் குறித்து பேசலாம், விவாதிக்கலாம்; ஆனால் தீர்மானங்கள் நிறைவேற்றினால், அது சட்டப்படி செல்லுபடியாகாது.
எடுத்துக்காட்டாக தமிழக கிராம ஊராட்சிகள் நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சியின் மொத்த வாக்காளர்களில் 10% அல்லது கிராம ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட வாக்காளர்கள் கலந்து கொண்டிருப்பதை ஆங்கிலத்தில் கோரம் எனப்படும்.[4]
கூட்டத்தில் கோரம் உள்ளதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் நபர் கூட்டத் தலைவர் ஆவார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Procedures Used in Meetings: Quorum of Members". Internet Band Boosters International. Archived from the original on 9 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Quorum Definition:". Duhaime.org. Archived from the original on 7 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ C. Allan Jennings. "Robert's Rules for Defining a Quorum". For Dummies. John Wiley & Sons. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
- ↑ Gram Panchayat
- ↑ "Henry M. Robert (1837–1923). Robert's Rules of Order Revised. 1915. 64 A Quorum". Bartleby.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.