கோயிந்துவால் சாகிப் மின் உற்பத்தி நிலையம்
Appearance
கோயிந்துவால் சாகிப் மின் உற்பத்தி நிலையம் Goindwal Sahib Power Plant | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவு | 31°23′N 75°09′E / 31.383°N 75.150°E |
கோயிந்துவால் சாகிப் மின் உற்பத்தி நிலையம் (Goindwal Sahib Power Plant) நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமாகும். இந்திய மாநிலமான பஞ்சாபில் தரண் தரண் மாவட்டத்தில் இருக்கும் கோயிந்துவால் சாகிப் நகரத்தில் இம்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.
மின் உற்பத்தி நிலையம் குணபதி வெங்கட கிருட்டிண ரெட்டி எனப்படும் கு.வெ.கி குழுமத்தால் இந்நிலையம் இயக்கப்படுகிறது. மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள டோக்கிசுட் மற்றும் செரிகர்கா நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. [1]
மின் திறன்
[தொகு]540 (2x270) மெகா வாட்டு மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. [2]
நிலை | அலகு எண் | மெ.வா]]) | தொடக்கம் |
---|---|---|---|
1ஆவது | 1 | 270 | 1 ஏப்ரல் 2016 [3] |
1ஆவது | 2 | 270 | 14 ஏப்ரல் 2016 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.gvk.com/ourbusiness/energy/thermal.aspx
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-05. Retrieved 2021-01-23.
- ↑ http://www.indiainfoline.com/article/news-top-story/bhel-commissions-270-mw-thermal-unit-in-punjab-116021800155_1.html
.