கோமதீஸ்வரர் சிலை
கோமதீஸ்வர பாகுபலி | |
---|---|
57 அடி உயர கோமதீஸ்வரரின் ஒற்றைக்கல் சிற்பம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சரவணபெலகுளா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 12°51′14″N 76°29′05″E / 12.854026°N 76.484677°E |
சமயம் | சமணம் |
கோமதீஸ்வர் சிலை (Gommateshwara Statue) 57 அடி உயரம் கொண்ட ஒரே கருங்கல்லால் வடிக்கப்பட்டது. அருகதரான பாகுபலிக்குப் அர்ப்பணிக்கப்பட்ட கோமதீஸ்வரர் எனும் பெயர் கொண்ட இச்சிலை, கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டதிலுள்ள விந்தியகிரி மலையடிவாரத்திலுள்ள திகம்பர சமண சமய மையங்கள் அதிகம் கொண்ட சரவணபெலகுளா எனுமிடத்தில் அமைந்துள்ளது. மேலைக் கங்க மன்னரின் படைத்தலைவரும், அமைச்சருமான சந்திரராயன் என்பவரால், இச்சிலை பொ.ஊ. 983ல் நிறுவப்பட்டது.
கோதீஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மகாஅபிசேகத்தின் போது உலகம் முழுவதிலிருந்து பக்தர்கள் இங்கு கூடுவர்.[1][2] குடமுழுக்கின் போது கோமதீஸ்வரர் சிலைக்கு நீர், பால், தயிர், சந்தனம், குங்குமப்பூ, குங்குமம் மற்றும் இளநீரால் அபிசேகம் செய்யப்படுகிறது.
கோமதீஸ்வரர் சிலையின் பாகங்கள்
[தொகு]கோமதீஸ்வரர் சிலையின் பாகங்களைக் காட்டும் காட்சிகள்
பாகுபலியின் கருங்கல் சிலைகள்
[தொகு]கர்நாடகா மாநிலத்தில் கோமதீஸ்வரின் 20 அடி உயரத்திற்கு மேற்பட்ட ஐந்து சிலைகள் அமைந்த இடங்கள்:
- 57 அடி உயரம், சரவணபெலகுளா, ஹாசன் மாவட்டம், பொ.ஊ. 983
- 42 அடி உயரம், கர்கலா, உடுப்பி மாவட்டம் பொ.ஊ. 1432
- 39 அடி உயரம் தர்மஸ்தலா, தென் கன்னட மாவட்டம், பொ.ஊ. 1973
- 35 அடி உயரம், வேணூர், தென் கன்னட மாவட்டம், பொ.ஊ. 1604
- 20 அடி உயரம், கோமதகிரி, மைசூர் மாவட்டம், பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டு
-
கோமதீஸ்வரர் சிலை, (பொ.ஊ. 981)
-
பாகுபலி சிலை, கர்கலா (பொ.ஊ. 1432)
-
பாகுபலி கருங்கல் சிலை, வேணூர் (பொ.ஊ. 1604)
-
பாகுபலி சிலை, கோமதீஸ்வரகிரி (பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டு)
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Official website Hassan District". Archived from the original on 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-03.
- ↑ Zimmer 1953, ப. 212.
மேற்கோள்கள்
[தொகு]- Jaini, Jagmandar-lāl (1927), Gommatsara Jiva-kanda, archived from the original on 2006
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - Rice, B. Lewis (1889), Inscriptions at Sravana Belgola: a chief seat of the Jains, (Archaeological Survey of Mysore), Bangalore : Mysore Govt. Central Press
- Zimmer, Heinrich (1953) [April 1952], Campbell, Joseph (ed.), Philosophies Of India, இலண்டன், E.C. 4: Routledge & Kegan Paul Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0739-6
{{citation}}
: Unknown parameter|editorlink=
ignored (help)CS1 maint: location (link)