கோபுரம் (தொலைக்காட்சித் தொடர்)
கோபுரம் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் | செய்யாறு ரவி |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 325 |
தயாரிப்பு | |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சத்ய ஜோதி படங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 13 ஆகத்து 2001 15 ஆகத்து 2002 | –
கோபுரம் என்பது சன் தொலைக்காட்சியில் ஆகத்து 13, 2001 முதல் ஆகத்து 15, 2002 வரை ஒளிபரப்பாகி, 325 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சத்ய ஜோதி படங்கள் என்ற நிறுவனம் தயாரிக்க சரத்பாபு, சாதனா, கல்தூண் திலக், ஜெகன் நிவாஸ், தீபா வெங்கட், அம்ரிதா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
கதைச்சுருக்கம்
[தொகு]செயந்தன், வசந்தன் என இரு அண்ணன், தம்பிகளுக்கு இடையே நிகழும் வாழ்வியல் சூழல்களை எடுத்துக் காட்டுகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் ஒரு குளிர்பானத் தொழிலைத் தொடங்குகின்றனர். அத்தொழில் தொடங்க அவர்களுக்கு முப்பதாயிரம் உரூபாய் தேவைப்படுகிறது. இந்நிலையில் பேருந்தில் கண்டெடுத்தப் பத்தாயிரம் உருபாய் பணத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, அத்தொழில் கிடைக்கும் இலாபத்தில் 10 சதவீதத்தை, அண்ணாமலையார் அறக்கட்டளையில், பெயர் தெரியாத அந்த பத்தாயிரம் உரூபாயை உடையவருக்காகச் சேமிக்கின்றனர். தற்செயலாக அந்நிறுவனத்தில் பணியாற்ற பத்மினி என்ற பெண் அமைகிறாள். பேருந்தில் பணத்தை இழந்தவரின் மகளே அவளாவார். இந்நிலையில் அவள் வழியே, அப்பெண்ணின் தந்தை பெயர் மாதவன் எனவும், பணத்தை இழந்தமையால் பெரும் இடருக்கும் அவர் ஆட்பட்டதை எண்ணி, இரு முதலாளிகளும் வருந்துகின்றனர். இந்நிலையில் இச்சூழலை அறிந்த, அண்ணன், தம்பிமாரின் வழக்குரைஞர், இந்த இரு முதலாளிகளின் எண்ணங்களையும், மனதையும் திரித்து, சமுதாயத்தில் காட்டுகிறார். இவற்றை எல்லாம் கடந்து, அந்த இரு உடன்பிறப்புகளும், தங்கள் மனநிலையையும், அவர்களின் எண்ணங்களையும் நிலைநாட்டி உண்மையை வெற்றி பெறச் செய்கின்றனர்.
நடிகர்கள்
[தொகு]- சரத்பாபு - செயந்தன்/வசந்தன்
- சாதனா
- கல்தூண் திலக் - ஜெய பிரகாஷ்
- ஜெகன் நிவாஸ்
- தீபா வெங்கட்
- அம்ரிதா - வனிதா
- காயத்ரி பிரியா - நந்தினி
- விஜய் ஆனந்த் -
- ஜானவி
- தாரணி
- கௌசிக் - அருண்
- விஷ்வா
- இதயம் ரவி
- விஜய் கிருஷ்ணராஜன்
- சௌமியா
- சௌபர்னிகா
- அம்மு
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2001 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2002 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்