உள்ளடக்கத்துக்குச் செல்

கோபி ஷங்கர் மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி ஷங்கர் மதுரை
பிறப்பு13 ஏப்ரல் 1991 (1991-04-13) (அகவை 33) மதுரை, இந்தியா
இருப்பிடம்மதுரை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்

கோபி ஷங்கர் மதுரை (Gopi Shankar Madurai, பிறப்பு: 13 ஏப்ரல், 1991) இளம் சமூக சேவகர்களுக்கான காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்ற முதல் தமிழர் ஆவார். பாலின சமத்துவ போராளியான கோபி, பால்புதுமையராக வாழும் ஒரு இடையிலிங்க (Intersex) நபர் ஆவார்.[1][2] கோபி ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் இந்திய மெய்யியலை கற்று, ஸ்ரீ ராமகிருஷ்ணா விஜயம் ஆசிரியர் குழுவில் சேவையாற்றினார், பின்னர் 2011-ல் சிருஷ்டி என்னும் மாற்று பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவுள்ள மக்களுக்கான மாணவர் அமைப்பை, மதுரையில் துவக்கினார். கோபி கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட, இந்தியாவின் இளம் வேட்பாளர் ஆவார்.[3][4][5][6] பால், பாலினம் , பாலின ஒருங்கிணைவு பற்றிய இவரது சொற்பொழிவு ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் பொது பார்வைக்காக யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.[7] கடந்த 2015 ஆம் ஆண்டு கோபி இந்திய நாடாளுமன்றத்துக்கு, மாற்றுப்பாலினத்தவர் மசோதா தாக்கல் செய்ய சாட்சிக்காக அழைக்கப்பட்டார். கோபியின் கட்டுரைகள் விர்ஜினியா பல்கலைக்கழக சமூகவியல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை, இவர் கொலம்பியா, ஜார்ஜ் வாஷிங்டன், ஆக்ஸ்போர்ட், உப்பசல பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாலினங்கள் குறித்து வகுப்புகள் எடுத்துள்ளார். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இவருக்கு சிறப்பு முதன்மைத்துவ பட்டம் வழங்கியுள்ளது.[8] மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையத்தில், கோபி சங்கா் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கருநாடகம், தெலங்கானா, இலட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு பிராந்திய பகுதிக்கு, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.[9]

நூல்

[தொகு]
  • மறைக்கப்பட்ட பக்கங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இடையலிங்கத்தவர்: பாலினம் - தெரிந்ததும் தெரியாததும்". தி இந்து.
  2. "மதுரை வடக்கு தேர்தல் களத்தில் மாற்று பாலினத்தவர் உரிமைப் போராளி". தி இந்து.
  3. "தமிழக தேர்தலில் போட்டியிடும் இன்டர்செக்ஸ் வேட்பாளர்" – via The News Minute.
  4. "மாற்றத்துக்கான கல்வி: உடலைப் போற்றும் கல்விக்கு ஓர் இனிய தொடக்கம்". தி இந்து.
  5. "ஊடக கவன ஈர்ப்பால் முக்கியக் கட்சிகளிடம் இருந்து மிரட்டல்: வேதனை பகிரும் மதுரை வடக்கு வேட்பாளர் கோபி ஷங்கர்". தி இந்து.
  6. "Profile of Speakers: Gopi Shankar Madurai at Madrid Summit 2017". Archived from the original on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03 – via www.worldpridemadrid2017, Spain.
  7. "கோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்!". Your Story Tamil.
  8. "மாற்றுப்பாலினத்தவரின் உணர்வுகளை உலகம் புரிந்துகொள்ள வேண்டும் - சர்வதேச அளவில் ஒலித்த தமிழ்க் குரல்!" – via www.vikatan.com.
  9. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/aug/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3454740.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_ஷங்கர்_மதுரை&oldid=3552151" இலிருந்து மீள்விக்கப்பட்டது