கோபால கிருஷ்ண விசுவகர்மா
கோபால கிருஷ்ண விசுவகர்மா | |
---|---|
பிறப்பு | காசீப்பூர், உத்திரப் பிரதேசம் | 1 அக்டோபர் 1934
இறப்பு | 24 மார்ச்சு 2004 புது தில்லி | (அகவை 69)
பணி | முடவியல் அறுவை சிகிச்சை நிபுணர் |
வாழ்க்கைத் துணை | இராதா |
கோபால கிருஷ்ணா விசுவகர்மா (Gopal Krishna Vishwakarma) (1 அக்டோபர் 1934 - 24 மார்ச் 2004) ஜி. கே. விசுவகர்மா என்றும் மிகவும் பிரபலமாக அறியப்படும் இவர் ஒரு சிறந்த எழும்பு அறுவைச் சிகிச்சை நிபுணராவர். மேலும் இவர் கல்வியாளராகவும் பொது சுகாதார நிர்வாகியாகவும் அறியப்படுகிறார். இவர் அக்டோபர் 1986 முதல் அக்டோபர் 1992 வரை சுகாதார சேவைகள் இயக்குநராக இருந்தார். இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய வெள்ளி விழா விருது (1983) மற்றும் மரு. பி. சி. ராய் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்த்தில் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசில் நான்காவதாக குடிமக்களுக்கு வழங்கப்பெறும் உயர் விருதான பத்மசிறீ விருது (1985) இவருக்கு வழங்கப்பட்டது.[1]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஜி. கே. விசுவகர்மா, உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூரில் 1934 அக்டோபர் 1 அன்று பிறந்தார்.
கல்வி
[தொகு]காசிப்பூர் மற்றும் வாரணாசியில் தனது ஆரம்பக் கல்விக்குப் பிறகு, விசுவகர்மா இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் (1957) மற்றும் முதுகலை மருத்துவம் மற்றும் அறுவையியல் (1961) ஆகியவற்றை முடிக்க இலக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]தனது மருத்துவக் கல்வியை முடித்த பிறகு விசுவகர்மா 1963 முதல் 1968 வரை புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சையின் உதவி பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.[3] அங்கு இவர் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். 1963 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதன்முறையாக முதுகெலும்பில் ஏற்படும் பக்கவாட்டு வளைவிற்கான சிகிச்சைக்கான கருவியை கையாண்டார்.
பின்னர் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மும்பை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 1971 ஆம் ஆண்டில் கோவா மருத்துவக் கல்லூரியில் நாட்டின் முதல் நவீன எலும்பு வங்கியைத் தொடங்கினார்.
1973 முதல் 1977 வரை விசுவகர்மா ஈரானின் ஜுண்டி ஷாபூர் பல்கலைக்கழகத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் பணியில் சேர்ந்தார். 1973 ஆம் ஆண்டில் அனைத்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் கை மற்றும் கால்களின் முனைகளை மீண்டும் இணைக்கும் பணியை இவர் முன்னெடுத்தார்.
1977 முதல் 1979 வரை புதுதில்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியராகவும், எல். என். ஜே. பி மருத்துவமனை மற்றும் புதுதில்லியிலுள்ள ஜி. பி. பந்த் மருத்துவமனையில் தலைமை எலும்பியல் மருத்துவராகவும் இருந்தார்.
1979 ஆம் ஆண்டில் சப்தர்ஜங் மருத்துவமனை மத்திய எலும்பியல் நிறுவனத்தின் இயக்குநராகவும், பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் தலைவராகவும், சப்தர்ஜங்க் மருத்துவமனையின் தேசிய எலும்பியல் மற்றும் காய அறுவை மருத்துவவியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். விசுவகர்மா, புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் மத்திய எலும்பியல் நிறுவனத்தில் இடுப்பு காசநோய் சிகிச்சையில் சவ்வு எலும்பியல் அறுவை சிகிச்சையைத் தொடங்கினார்.[4][5] மத்திய எலும்பியல் நிறுவனத்தில் தான் விசுவகர்மா எலும்புகள் மற்றும் மூட்டுகளின் அலோஜெனிக் மாற்று அறுவை சிகிச்சை குறித்து ஆராய்ச்சியைத் தொடங்கினார்.[6]
1983 முதல் அக்டோபர் 1986 வரை இவர் பல்வேறு வகைகளில், எலும்பியல் மருத்துவ கண்காணிப்பாளராகவும் மற்றும் ஆலோசகராகவும், சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் இந்திய அரசின் சுகாதார சேவைகளின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் இருந்தார்.[7][8]
இவர் அக்டோபர் 29,1986 அன்று சுகாதார சேவைகள் தலைமை இயக்குநராக முறையாக பொறுப்பேற்றார். அக்டோபர் 1,1992 அன்று தான் ஓய்வு பெறும் வரை அதே பதவியில் தொடர்ந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]விசுவகர்மாவுக்கு இராதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லோவீனிஷ் ஜி கிருஷ்ணா மற்றும் நிர்வன் ஜி கிருஷ்ணா என இரு மகன்கள் உள்ளனர். லோவீனிஷ் ஜி கிருஷ்ணா மத்திய எலும்பியல் நிறுவனம் மற்றும் வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரியின் இயக்குநராக உள்ளார்.[9] நிர்வன் ஜி கிருஷ்ணா, பிரசார் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
ஆராய்ச்சி
[தொகு]விசுவகர்மா 1982 ஆம் ஆண்டில் மத்திய எலும்பியல் நிறுவனம், சப்தர்ஜங் மருத்துவமனையில் காசநோய் இடுப்பிலுள்ள சவ்வு மூட்டுச் சீரமைப்பு நுட்பத்தை உருவாக்கினார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awardees – 1985". Archived from the original on 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2024-06-19.
- ↑ "Gazette of India, November 26,1983". 26 November 1983.
- ↑ "Prof. A K Banerji, AIIMS.edu".
- ↑ Vishwakarma, G. K.; Khare, A. K. (1986). "Amniotic arthroplasty for tuberculosis of the hip. A preliminary clinical study". The Journal of Bone and Joint Surgery. British Volume 68 (1): 68–74. doi:10.1302/0301-620X.68B1.3941144. பப்மெட்:3941144.
- ↑ "Annual report of Safdarjung Hospital, Vardhman Mahavir Medical College (pg 17)" (PDF). Archived from the original (PDF) on 2 June 2021. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
- ↑ "Allogenic transplantation of ultra-deep frozen osteochondral grafts".
- ↑ "Gazette of India, November 26,1983". 26 November 1983.
- ↑ "Gazette of India, August 9, 1986". 9 August 1986.
- ↑ "Directory of Safdarjang Hospital and VMMC (pg 4)" (PDF). Archived from the original (PDF) on 2 June 2021. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
- ↑ "Annual report of Safdarjung Hospital, Vardhman Mahavir Medical College (pg 17)" (PDF). Archived from the original (PDF) on 2 June 2021. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
- ↑ "Annual report of Safdarjung Hospital, Vardhman Mahavir Medical College, 2015". 19 April 2016.