உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தா கப்பூர் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா கப்பூர் கல்வெட்டு
Kota Kapur inscription
Prasasti Kota Kapur
கோத்தா கபூர் கல்வெட்டின் முகடு
செய்பொருள்கல்வெட்டு
எழுத்துபல்லவ எழுத்துமுறை
உருவாக்கம்28 பிப்ரவரி 686
தற்போதைய இடம்இந்தோனேசியாவின்
தேசிய அருங்காட்சியகம்
, ஜகார்த்தா
பதிவுD. 80

கோத்தா கப்பூர் கல்வெட்டு (ஆங்கிலம்: Kota Kapur Inscription; இந்தோனேசியம்: Prasasti Kota Kapur) என்பது டச்சு கிழக்கிந்திய தீவுகளின் (Dutch East Indies) (தற்போது இந்தோனேசியா) ஜே.கே. மியூலனின் (J.K. van der Meulen) எனும் இடச்சுக்காரரால் 1892 திசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.

இந்தத் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமான கோத்தா கப்பூர் கிராமத்தின் பெயரால் இந்தக் கல்வெட்டிற்குப் பெயரிடப்பட்டது.[1]

பொது

[தொகு]

இந்தக் கல்வெட்டு, பழைய மலாய் மொழி சார்ந்த கல்வெட்டுகளில் எஞ்சியிருக்கும் மிகப் பழைமையான கல்வெட்டு என்று அறியப்படுகிறது. கோத்தா கப்பூர் கல்வெட்டு, பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட்டது. மேலும், திசம்பர் 1892 என பதிவு செய்யப்பட்டு உள்ளது.[2][3]

இந்தக் கல்வெட்டு பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட்ட பழைய மலாய் மொழியைப் பயன்படுத்துகிறது. இது பண்டைய மலாய் மொழியின் பழைமையானச் சான்றுகளில் ஒன்றாகும்.

வரலாறு

[தொகு]

608 சக ஆண்டு (கி.பி 28 பிப்ரவரி 686) வைசாக அரை அமாவாசையின் முதல் நாள் என தேதியிட்ட இந்தக் கல்வெட்டு, சிறீவிஜயத்திற்க்கு எதிராகத் துரோகம் செய்தவரின் சாபத்தையும், ஜாவாவுக்கு எதிரான சிறீவிஜய படையெடுப்பின் தொடக்கத்தையும் குறிப்பிடுகிறது.

இந்தக் கல்வெட்டை முதலில் பத்தேவியாவில் (Batavia) உள்ள பத்தேவியா ஜெனூட்சாப் (Bataviaasch Genootschap) எனும் நிறுவனத்தில் பணிபுரிந்த இடச்சு கல்வெட்டு எழுத்தாளரான எச். கெர்ன் (H. Kern) என்பவர் ஆய்வு செய்து தேதியிட்டார். முதலில், சிறீவிஜயா என்பது ஒரு மன்னரின் பெயர் என்று அவர் நினைத்தார். இந்தப் பெயர் சீன பௌத்த துறவியான யி சிங் (Yijing) என்பவரின் பதிவுகளுக்கு இணையாக உள்ளது.[4]:82

உள்ளடக்கம்

[தொகு]

கோத்தா கப்பூர் கல்வெட்டு என்பது சிறீவிஜயத்தின் ஆட்சியாளரான ஜெயநேசன் திருத்தி எழுதிய ஐந்து கல்வெட்டுகளில் ஒன்றாகும். கோத்தா கப்பூர் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சிறீவிஜயத்திற்கு எதிரான குற்றம், அத்துமீறல் மற்றும் தேசத் துரோகம் போன்ற குற்றச் செயல்களுக்கான சாபங்களைக் கொண்டுள்ளன. கோத்தா கப்பூர் கல்வெட்டின் உள்ளடக்கங்களை ஜார்ஜ் கோடெஸ் (George Cœdès) மொழிபெயர்த்தார்:

முக்கியத்துவம்

[தொகு]

கோத்தா கப்பூர் கல்வெட்டு என்பது சிறீவிஜயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சிறீவிஜய கல்வெட்டு ஆகும். நவம்பர் 29, 1920 அன்று கண்டுபிடிக்கப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு; மற்றும் நவம்பர் 17, 1920 அன்று கண்டுபிடிக்கப்பட்ட தாலாங் துவோ கல்வெட்டு (Talang Tuwo inscription) ஆகிய இரு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே கோத்தா காப்பூர் கல்வெட்டைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்தோனேசியாவின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளில், கோத்தா கப்பூர் கல்வெட்டு என்பது சிறீவிஜய வரலாற்றுக்கு மிக முக்கியமான சான்றாக அமைகிறது. இந்தக் கண்டுபிடிப்பு இந்தோனேசிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தையும் திறந்து விட்டது.

அத்துடன் இந்தோனேசிய வரலாற்றில் இந்து-பௌத்த பரிமாணத்தையும் (Hindu-Buddhist era) வெளிப்படுத்தியது. கோத்தா கப்பூர் கல்வெட்டு; 6-ஆம் 7-ஆம் நூற்றாண்டுகளில் அப்பகுதியில் வசித்த பண்டைய சமூகத்தினரின் வாழ்வியல் முறையையும் வெளிப்படுத்தியது. மேலும், அந்தக் காலத்து இந்து-பௌத்த செல்வாக்கைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டி உள்ளது.[5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Andrea Acri (2016). Esoteric Buddhism in Mediaeval Maritime Asia: Networks of Masters, Texts, Icons. ISEAS-Yusof Ishak Institute. pp. 256–258. ISBN 978-981-4695-08-4.
  2. Colette Caillat; J. G. de Casparis (1991). Middle Indo-Aryan and Jaina Studies. BRILL. p. 36. ISBN 90-04-09426-1.
  3. J. G. De Casparis (1978). Indonesian Chronology. BRILL Academic. pp. 15–24. ISBN 90-04-05752-8.
  4. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  5. "Buddhism in the Srivijaya Empire and beyond". www.khanacademy.org (in ஆங்கிலம்). Retrieved 22 January 2025.

மேலும் படிக்க

[தொகு]
  • George Coedès, Les inscriptions malaises de Çrivijaya, BEFEO 1930
  • J.G. de Casparis, Indonesian Palaeography, Leiden (Brill) 1975.
  • Safiah Karim, Tatabahasa Dewan Edisi Baharu, Dewan Bahasa dan Pustaka 1993.

வெளி இணைப்புகள்

[தொகு]