கோண அதிர்வெண்
இயற்பியலில் கோண அதிர்வெண் எனப்படுவது சுழலும் விகிதத்தை அளவிடும் எண்ணிக்கணியம். கோண அதிர்வெண்ணானது கோண வேகம் எனப்படும் திசையன் கணியத்தின் பருமன் ஆகும். கோண அதிர்வெண் திசையன் எனப்படுவது சிலவேளைகளில் கோண வேகத்திற்கு ஒத்தசொல்லாக பயன்படுகிறது.[1]
ஓர் சுழற்சி 2π ரேடியன்களிற்கு சமனாகும், எனவே[1][2]
இங்கு
- ω என்பது கோண அதிர்வெண் அல்லது கோணக் கதி (செக்கனிற்கான ரேடியன்களில் அளக்கப்படும்),
- T என்பது சுழற்சிக்காலம் (நொடிகளில் அளக்கப்படும்),
- f என்பது அதிர்வெண் (ஹேட்சில் அளக்கப்படும்),
அலகுகள்
[தொகு]SI அலகுகளில் கோண அதிர்வெண் நொடிக்கான ரேடியன்கள் எனப்படுகிறது, பரிமாணப்படி அலகு ஹேட்சு என்பதும் சரியானதே, ஆனால் நடைமுறையில் சாதாரண அதிர்வெண் f இற்கே பாவிக்கப்படுகிறது, ω இற்கு இல்லையென்றே கூறலாம், இந்த நடைமுறையால் குழப்பம் தவிர்க்கப்படுகிறது.[3]
எடுத்துக்காட்டுகள்
[தொகு]வட்ட இயக்கம்
[தொகு]வட்ட இயக்கத்திலுள்ள பொருளின் அச்சிலிருந்தான தூரம், தொடலி வேகம், கோண அதிர்வெண் ஆகியவற்றிற்கிடையில் தொடர்புண்டு:
சுருளிவில்லின் அலைவு
[தொகு]மரபார்ந்த விசையியல் | ||||||||
வரலாறு · காலக்கோடு
| ||||||||
சுருளிவில்லில் இணைக்கப்பட்ட பொருள் ஆடலுறும். சுருளிவில்லை திணிவற்றதாகவும் தடையில்லாததாகவும் கருதினால் அதன் இயக்கம் பின்வரும் கோண அதிர்வெண்ணுடைய எளிய இசையியக்கமாக இருக்கும்:[4]
இங்கு
- k வில் மாறிலி
- m பொருளின் திணிவு.
ω என்பது இயற்கை அதிர்வெண் (இது சிலவேளைகளில் ω0 ஆல் குறிக்கப்படும்).
அலைவுறும் பொருளின் அதிர்வெண்
- இனால் கணிக்கப்படும்,
இங்கு x சமனிலைத் தானத்திலிருந்தான இடப்பெயர்ச்சி.
இங்கு சாதாரண அதிர்வெண்ணைப் பயன்படுத்துகையில் இச்சமன்படானது கீழ்வருமாறு அமையும்
LC மின்சுற்றுக்கள்
[தொகு]LC சுற்றின் பரிவு அதிர்வெண்ணானது மின் கொள்ளளவம் (C ஃபரட்டில் அளக்கப்படுகிறது), மின் தூண்டுதிறன் (L ஹென்றியில் அளக்கப்படுகிறது) ஆகியவற்றின் பெருக்கத்தின் தலைகீழின் வர்க்கமூலத்திற்கு சமனாகும்.[5]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோளும் குறிப்புகளும்
[தொகு]- ↑ 1.0 1.1 Cummings, Karen (Second Reprint: 2007). Understanding physics. New Delhi: John Wiley & Sons Inc., authorized reprint to Wiley - India. pp. 449, 484, 485, 487. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-265-0882-2.
{{cite book}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|coauthors=
ignored (help)(UP1) - ↑ Holzner, Steven (2006). Physics for Dummies. Hoboken, New Jersey: Wiley Publishing Inc. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7645-5433-9.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Lerner, Lawrence S. (1996-01-01). Physics for scientists and engineers. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86720-479-7.
- ↑ Serway,, Raymond A. (2006). Principles of physics - 4th Edition. Belmont, CA.: Brooks / Cole - Thomson Learning. pp. 375, 376, 385, 397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-46479-0.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)CS1 maint: extra punctuation (link) - ↑ Nahvi, Mahmood (2003). Schaum's outline of theory and problems of electric circuits. McGraw - Hill Companies (McGraw - Hill Professional). pp. 214, 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-139307-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)(LC1)
தொடர்புடைய வாசிப்பிற்கு:
- Olenick ,, Richard P. (2007). The Mechanical Universe. New York City: Cambridge University Press. pp. 383–385, 391–395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-71592-8.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)CS1 maint: extra punctuation (link)