உள்ளடக்கத்துக்குச் செல்

கோணான்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பெரியநாயகி ஆலயம்

கோணான்குப்பம் இந்தியாவின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். இங்கு தான் வீரமாமுனிவர் என்று பிரபலமாக அறியப்பட்ட அருட்தந்தை ஜோசப் பெஸ்கி உலக புகழ்பெற்ற தேம்பாவணி எனும் காப்பியத்தை தமிழ் மொழியில் எழுதினார்.[1]

பெரியநாயகி மாதா

[தொகு]
வரலாறு
[தொகு]
பெரியநாயகி

[சான்று தேவை]

ஃபிரான்சிஸ் ஃபெஸ்கி

புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் [2]மிஷனரி கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் முகாசபரூரின் வனப்பகுதியாக இருந்த கோணான்குப்பத்தில் அமைந்துள்ளது. இங்கே நிறைய மரங்கள் மற்றும் புதர்கள் இருந்ததால் மக்கள் தங்களுடைய கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர்.

17-ஆம் நூற்றாண்டில், இத்தாலியப் பாதிரியார் மற்றும் மிஷனரி அருட்தந்தை பெஸ்கி, அவர் வேலை செய்யும் இடத்தில், அதாவது ஏலாக்குறிச்சி என்ற திருக்கோவிலூரில் (இப்போது கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ளது [சான்று தேவை]) வைக்க மரியாள் (இயேசுவின் தாய்) இரண்டு சிலைகள் கொண்டு வந்தார். அவர் தமிழ்நாடு முழுவதும் பிரசங்கம் செய்து வந்தார். தன்னுடைய இடத்திற்கு இந்தக் காடுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் போது களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் தன்னுடன் கொண்டு வந்த இரண்டு சிலைகளுடன் அவர் தூங்கி விட்டார். கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் புதரின் பின்னால் ஒரு சிலையினை மறைத்து வைத்து விட்டார்கள். அருட்தந்தை ஒரு சிலை காணாமற் போய்விட்டதென்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு வருத்தத்துடன் இருப்பிடம் வந்தடைந்தார். முகாசபரூரை சேர்ந்த கச்சிரயார் என்ற ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தை இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தார். ஒரு நாள் மரியாள் அவருடைய கனவில் தோன்றி "கச்சிரயார், நான் காட்டில் தனியாக இருக்கிறேன், நீ எனக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டினால், உனக்கு ஒரு குழந்தையை வரமாகத் தருகிறேன்" என்றார். இதைச் சொல்லிவிட்டு அவர் மறைந்துவிட்டார். இதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், காட்டில் சிலையினை கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்கினார். அவர்கள் புதர்கள் மற்றும் மரங்களை வெட்டும்போது, ஒரு பெரிய புதருக்குப் பின்னால் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலை சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மக்கள் ஒரு சிறிய தேவாலயத்தை கட்டி அங்கு இந்த சிலையை வைத்து வழிபடத் தொடங்கினர்.

சிறிது காலத்திற்குப் பிறகு அருட்தந்தை பெஸ்கி நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்து கோணங்குப்பம் வந்தடைந்தார் அங்கு தொலைந்துபோன மேரி மாதா சிலைக்கு சிறிய தேவாலயம் கட்டப்பட்டு இருந்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் கோணான்குப்பமே தான் வேலை செய்யும் இடம் என்று முடிவு செய்தார். இன்று உள்ள ஆலயத்தை கச்சிராயரின் உதவியுடன் கட்டினார். இதுவே அவர் கட்டிய முதல் வழிபாட்டுத் தலமாக இருந்தது. புதிய ஆலயத்தை கட்டி முடித்து அவர் சென்னை சென்று மணிலாவில் இருந்து ஒரு சிலை வாங்கி வருவதற்கு மைலாப்பூர் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் கன்னி மாதா தனது கைகளில் குழந்தை இயேசுவை கைகளில் வைத்துள்ள ஒரு மாதிரி உருவத்தை உருவாக்கினார். படம் இறுதியில் வந்தடைந்து தேவாலயத்தில் அமைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது.

வீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.0 மீ) உயர சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்திருச்சபையின் மரியாதைக்குரிய விதமாக பெஸ்கி அவரது படைப்புகளில் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற தமிழ் கவிதைத் தேம்பாவணியை 1726-ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். 1728 - 1729-ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய தமிழ் மாநாடு அவரது தமிழ்ப் பணிக்கு ஒப்புதல் அளித்து பொது நன்மைக்காக அது வெளியிடப்பட்டது.

அமைவிடம்
[தொகு]

உளுந்தூர்பேட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோணான்குப்பம் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம், முகாசபரூருக்கு அருகிலுள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. "Faith Blog: My God and My All, Let Thy Name Be Glorified!: Thembavani: A rare Tamil Poetry book written by Rev. Fr. Beschi ( Veeramamunivar)". maryfaithblogcom.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-18. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணான்குப்பம்&oldid=3588902" இலிருந்து மீள்விக்கப்பட்டது