கோட்டைமேடு
கோட்டைமேடு | |
---|---|
கிராமம் | |
![]() கிழக்கு கரையிலிருந்து வடமனேரி | |
ஆள்கூறுகள்: 11°48′50″N 78°02′57″E / 11.81389°N 78.04917°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | காடையாம்பட்டி |
அரசு | |
• வகை | ஊராட்சி அமைப்பு |
• தலைவர் | Vacant |
• வார்டு உறுப்பினர் | Vacant |
மொழி | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 636305 |
Telephone code | 04290 |
கோட்டைமேடு (Kottamedu) என்பது சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஒரு சிற்றூராகும். இவ்வூர் மேலூர், கீழூர், முஸ்லீம் தெரு, புளியமரத்து கொட்டாய் என நான்கு பகுதிகளைக் கொண்டது.
இதன் வடக்கில் வடமனேரி, (வடமனேரி சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மிகப்பெரிய ஏரியாகும்) கிழக்கில் மேற்கு சரபங்கா நதி, மேற்கில் சோலைகொட்டாய், தெற்கில் கலர்காடு ஆகியவை இதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரின் தென்மேற்கில் ஒடசல் ஏரி உள்ளது. தாராபுரம் மற்றும் கஞ்சனாயக்கன்பட்டியை இணைக்கும் புது ரோடு சாலை கோட்டைமேடு வழியாகச் செல்கிறது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 314 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
தொழில்கள்
[தொகு]கோட்டைமேடு ஊரின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். நெல், கரும்பு, பருத்தி, சாமந்தி பூ, காய்கறிகள் ஆகியன முக்கியமாக விளைவிக்கபடுகிறது. மேலும் விசைத்தறி, கைத்தறி மற்றும் பாய் உற்பத்தி போன்ற தொழிலிலும் மக்கள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் மற்றும் கட்டிட கூலிகளாகவும் உள்ளனர்.
வழிபாட்டுத்தலங்கள்
[தொகு]
இந்து மற்றும் இஸ்லாம் வழிபாட்டுத்தலங்கள் இங்கு உள்ளன. ஸ்ரீ கோட்டைமாரியம்மன் திருக்கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சக்தி விநாயகர் கோவில் போன்றவை உள்ளன. கோட்டைமாரியம்மன் கோவில் சித்திரை (மே மாதம்) மாதங்களிலும், செல்லாண்டியம்மன் ஆடியிலும் (சூலை) பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இஸ்லாமியர்களின் ஜமாத் பள்ளிவாசல் இங்கு உள்ளது.
கல்வி
[தொகு]கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறது. இங்கு சுமார் 200 மாணவர்கள் பயின்கின்றனர். இவ்வூரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இப்பள்ளியில் கற்கின்றனர். மொத்தம் எட்டு ஆசிரியர்கள் இப்பள்ளியில் உள்ளனர். இப்பள்ளி காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பள்ளியினை சிறப்பாக செயல்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kottamedu Village , Kadaiyampatty Block , Salem District". www.onefivenine.com. Retrieved 2025-01-29.
- ↑ "Pums-Kottaimedu-New-School". Archived from the original on 2018-07-23. Retrieved 2018-07-17.