உள்ளடக்கத்துக்குச் செல்

கோடை மலை, சிம்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடை மலை
நகரம்
கோடை மலை தொடருந்து நிலையம், சிம்லா இந்தியா

கோடை மலை (Summer Hill) கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,123 மீட்டர் உயரத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் மாநில தலைநகரான சிம்லாவின் தொலைதூர புறநகர்ப் பகுதியாகும்.[1] இது சிம்லா ரிட்ஜுக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே ஏழு மலைகளின் தொகுப்பில் ஒன்றாக அமைந்துள்ளது. [2]

வரலாறு

[தொகு]

கடந்த காலங்களில், மகாத்மா காந்தி சிம்லா வருகையின் போது கோடை மலையில் உள்ள ராஜ்குமாரி அம்ரித் கவுரின் [3] ஜார்ஜிய மாளிகையில் தங்கியிருந்தார்.[4] பாட்டர்ஸ் ஹில் என்றும் அழைக்கப்படும் இப்பகுதியில் பைன் மற்றும் தேவதாரு மரங்கள் நிறைந்த சரிவுகளில் அழகிய குடியிருப்புகள் பல உள்ளன. இது பிரபல ஓவியர் அம்ரிதா சேர்கிலின் (1913-1941) குடும்பத்தைச் சார்ந்தது.[5]

இன்று

[தொகு]

இந்த இடம் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. 1884-88 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முன்னாள் வைஸ்ராய்கள் தங்குமிடத்தில் இந்திய மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் (1965ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), [1] அமைந்துள்ளது. இது அருகிலுள்ள கண்காணிப்பு மலையில் உள்ளது. [6]

இன்று, இங்கு இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு முக்கியமாகக் கலை, வர்த்தகம், அறிவியல், மேலாண்மை, சட்டம் மற்றும் மொழிகளில் முதுகலை பாடங்கள் நடத்தப்படுகின்றன. இப்பல்கலைக்கழகமானது 1975இல் தொடங்கப்பட்டது. கோடை மலை கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதையில் அமைந்திருந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் வளாகத்திலிருந்து சிம்லாவிற்கு நடந்தே செல்கின்றனர். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Famous Places around Shimla". Archived from the original on 2016-03-29. Retrieved 2021-01-01.
  2. "Seven Hill Attractions". Archived from the original on 2020-02-18. Retrieved 2021-01-01.
  3. Summer Hill at mapsofindia.com
  4. 4.0 4.1 "Places of Interest, Shimla at hpuniversity". Archived from the original on 2011-07-19. Retrieved 2021-01-01.
  5. "Amrita Shergil Biography atsikh-heritage". Archived from the original on 2020-02-23. Retrieved 2021-01-01.
  6. IIAS History
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடை_மலை,_சிம்லா&oldid=3717446" இலிருந்து மீள்விக்கப்பட்டது