கோகிமா வடக்கு காவல் நிலையம்
கோகிமா வடக்கு காவல் நிலையம் Kohima North Police Station | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | செயல்பாட்டில் |
வகை | காவல் நிலையம் |
இடம் | கெசிக்கி வார்டு, கோகிமா, நாகாலாந்து, இந்தியா |
நிறைவுற்றது | 1933 |
கோகிமா வடக்கு காவல் நிலையம் (Kohima North Police Station) இந்தியாவின் நாகாலாந்து மாநிலம் கோகிமாவில் உள்ள கோகிமா கிராம நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள கெசிகி வார்டில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையம் ஆகும். 1933 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது நாகாலாந்தின் மிகப் பழமையான காவல் நிலையமாகத் திகழ்கிறது.[1][2]
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, மிகவும் சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் இந்நிலையத்துடன் சேர்ந்து நாகாலாந்தில் உள்ள மற்ற 14 காவல் நிலையங்களும் பின்பற்றின. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய அரசாங்கம் பெரிய வளர்ச்சியாக நாகாலாந்து மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் குறைத்தது.[3][4]
வரலாறு
[தொகு]கோகிமா வடக்கு காவல் நிலையம் 1933 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போதைய அசாம் மாகாணத்தின் நாகா இல்சு மாவட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முதல் காவல் நிலையம் இதுவாகும். பிரித்தானிய இந்தியாவில் நிறுவப்பட்ட இக்காவல் நிலையம் இப்போது நாகாலாந்து மாநிலத்தில் உள்ளது.[5]
2020 ஆம் ஆண்டில், தர மேலாண்மை அமைப்புக்கான பன்னாட்டு தரநிலை அமைப்பு சான்றிதழைப் பெற்ற காவல் நிலையமாக கோகிமா வடக்கு காவல் நிலையம் திகழ்கிறது. இந்தியாவின் முழு வடகிழக்குப் பிராந்தியத்திலும் இத்தகைய சான்றிதழைப் பெற்ற முதல் காவல் நிலையமாகவும் அரசாங்க அலுவலகமாகவும் இந்த நிலையம் ஆனது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "North Police Station in Kohima becomes first government agency in Nagaland to receive ISO certification". Eastern Mirror. 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
- ↑ "Kohima Police Station Becomes First of Its Kind in North East India to Receive ISO Certification". 23 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
- ↑ "Centre reduces AFSPA from Nagaland, Assam, Manipur". ThePrint. ANI. 1 April 2022. பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ "AFSPA now applicable fully only in 31 districts of 4 Northeast states". பிசினஸ் ஸ்டாண்டர்ட். PTI. 1 April 2022. பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ "Kohima north police station becomes 1st police station". Indigenous Herald. 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
- ↑ "First in NE : Kohima North police station gets ISO Certification". 23 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.