உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 22°31′32″N 88°21′59″E / 22.5255°N 88.3665°E / 22.5255; 88.3665
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் is located in இந்தியா
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்
இந்தியா இல் அமைவிடம்
மாற்றுப் பெயர்கள்KMOMA
பொதுவான தகவல்கள்
இடம்நியூ டவுன், கிரேட்டர் கல்கத்தா]][1], மேற்கு வங்காளம், இந்தியா
ஆள்கூற்று22°31′32″N 88°21′59″E / 22.5255°N 88.3665°E / 22.5255; 88.3665
ஆளும் குழுமேற்கு வங்காள அரசு
தொழில்நுட்ப விபரங்கள்
அளவு10-ஏக்கர் மனை
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான்
வலைதளம்
http://kmomamuseum.org/index.html

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் (கொல்கத்தா மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் ( KMOMA ) என்பது இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் நியூ டவுன் என்ற இடத்தில் கட்டப்படவுள்ள கலை அருங்காட்சியகமாகும் .[2]

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக சுமார் ரூ 500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமானது மாநில அரசால் நியூ டவுன் அருகிலுள்ள டவுன்ஷிப்பில் 10 ஏக்கர் பரப்பளவிலான மனையில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியமானது புகழ்பெற்ற சுவிஸ் கட்டடக் கலைஞர்களான ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடக்கலைஞர்கள்தான் பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது பறவைக்கூடு வடிவிலான மைதானத்தை அமைத்த பெருமையுடையவர்கள் ஆவர்.   [3]

இந்த கலை அருங்காட்சியகத் திட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நவம்பர் 2013 இல் அடிக்கல் நாட்டினார்.[4]

அமைவிடம்

[தொகு]

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் நியூ டவுன் என்னுமிடத்தில் பிஸ்வா பங்களா சாரணியின் ஒரு பகுதியான மேஜர் ஆர்ட்டேரியல் சாலையில், ஆக்ஷன் ஏரியா இரண்டாம் பிரிவில் 22°35′55″N 88°28′03″E / 22.59861°N 88.46750°E / 22.59861; 88.46750 . என்ற புவியமைப்பில் கட்டப்படவுள்ளது. இந்த பூங்காவின் வடக்குப் பகுதியில் அகங்காவும், தெற்குப் பகுதியில் நியூ டவுன் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் கொல்கத்தா சர்வதேச மாநாட்டு மையம் ஆகியனவும், கிழக்குப் பகுதியில் விரைவில் அமையவுள்ள மத்திய வணிக மாவட்டம் மற்றும் கிழக்கில் சர்வதேச நிதி மையம் ஆகியனவும், மேற்குப் பகுதியிலும், தென் மேற்குப் பகுதியிலும் ஜட்ராகாச்சி/ஹத்தியாரா ஆகிய பகுதிகளில் தற்போதுள்ள மக்கள் வசிக்கும் பகுதியும் அமையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு

[தொகு]

இந்தியாவின் முதல் திட்டமான கருதப்படுகின்ற இந்த ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரானின் கலை அருங்காட்சியகமானது, புதிய மாவட்டமான ராஜர்ஹாட்டில் நிலத்தைப் பெற்றுள்ளது. இந்த புதிய அருங்காட்சியகம் நகரின் புகழ்பெற்ற கலாச்சார கடந்த காலத்தைத் தழுவி அமைந்துள்ளது. மேலும் அதனை இந்தியாவின் "கலை நகரமாக" மாற்ற முயன்று வருகிறது. உயர்தர வகையிலான காட்சிக்கூடங்கள் மற்றும் கலை மறுசீரமைப்பு வசதிகள், பல்வகைக் கலைஞர்கள் அமைக்கின்ற ஸ்டுடியோக்கள் மற்றும் வெளிப்புற செயல்திறன் அரங்கம் போன்றவை இங்கு அமையவுள்ளன. மேலும் உள்ளூர் கலைஞர்களை மேம்படுத்துவும், ஊக்குவிக்கவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இவ்வருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக அது அமையும். இதன் காரணமாக அவர்கள் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு அமையும். 50,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அருங்காட்சியகத் திட்டமானது நவீன மற்றும் சமகால, தேசிய மற்றும் சர்வதேச கலைகளை ஒன்றிணைக்கும் வகையில் அமையவுள்ளது. இது கலை, இசை, சினிமா, புகைப்படக்கலை, இலக்கியம், நுண்கலை மற்றும் சிற்பம் ஆகிய பல துறையைச் சார்ந்த கலைகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்படவுள்ளது. காட்சியகங்கள், கலை மறுசீரமைப்பு, கல்வி, ஆராய்ச்சி வசதிகள், புகைப்பட வசதிகள், அலுவலகங்கள் மற்றும் தியேட்டர் ஆகியவையும் இங்கு அமையும். உணவு மற்றும் நிகழ்வு நடைபெறும் இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள், கலை மற்றும் கைவினைப்பொருட்களை விற்பனை செய்வதற்கான இடங்கள், வெளிப்புற செயல்திறன் இடம், பொது இடம் மற்றும் கார் நிறுத்துமிட வசதி போன்றவற்றையும் இது கொண்டிருக்கும். அவ்வகையில் இது ஒரு கலை நகரமாகவும் காட்சியளிக்கவுள்ளது.[5]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]