உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்கத்தா நகர மண்டபம்

ஆள்கூறுகள்: 22°34′05″N 88°20′42″E / 22.56806°N 88.34500°E / 22.56806; 88.34500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கத்தா நகர மண்டபம்
கொல்கத்தா நகர மண்டபம்
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிரோமன் டோரிக்
இடம்பினோய்-பாதல்-தினேஷ் பாக், கொல்கத்தா, இந்தியா இந்தியா
முகவரி4, எஸ்பிளனேட் வரிசை (மேற்கு), கொல்கத்தா - 700001
ஆள்கூற்று22°34′05″N 88°20′42″E / 22.56806°N 88.34500°E / 22.56806; 88.34500
நிறைவுற்றது1813
உரிமையாளர்கல்கத்தா மாநகர மன்றம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கர்னல். ஜான் கார்ஸ்டின்
மேற்கோள்கள்
Kolkata Town Hall

கொல்கத்தா நகர மண்டபம் (Kolkata Town Hall) என்பது கொல்கத்தாவில் உள்ள ஒரு நகர மண்டபமாகும். இது ரோமன் டோரிக் பாணியில், 1813 இல் கட்டடக் கலைஞரும், பொறியாளருமான மேஜர் ஜெனரல் ஜான் ஹென்றி கார்ஸ்டினால் (1756-1820) கட்டப்பட்டது. ஐரோப்பியர்களின் சமூகக் கூட்டங்களுக்கான இடத்தை உருவாக்க லாட்டரியிலிருந்து திரட்டப்பட்ட 700,000 ரூபாய் நிதியுடன் இது கட்டப்பட்டது.

கட்டடத்தின் வரலாறு

[தொகு]
1860 களில் நகர மண்டபம்.

1813–1900

[தொகு]

நகர மண்டபக் கட்டடம் 1813 இல் ரோமன்-டோரிக் பாணியில் கட்டப்பட்டது. முதலில், மண்டபம் ஒரு குழுவினரால் நிருவாகிக்கபட்டது. இக்குழுவினர் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், நிபந்தனைகளின் கீழ் மண்டபத்தைப் பயன்படுத்த பொதுமக்களை அனுமதித்தனர். சிலைகள் மற்றும் பெரிய அளவிலான உருவப்பட ஓவியங்களைக் காண பொதுமக்கள் மண்டபத்தின் தரைத்தளத்திற்குச் செல்ல அனுமதிக்கபட்டனர். ஆனால் அவர்கள் மேல் மாடிக்கு தேவையின்றி செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேற்படி மாடியை பயன்படுத்துவதற்காக குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. கல்கத்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பிறகு பல்கலைக்கழகத்தின் ஆண்டுத் தேர்வுகள் 1872 ஆம் ஆண்டு வரை இங்கு நடத்தப்பட்டன. அதன் பிறகு அவளுக்கு அதற்கான சொந்த கட்டங்கள் கிடைத்தன.

1867 ஆம் ஆண்டில், நகர மண்டபமானது, கல்கத்தா நகரத்தின் முன்னேற்றத்திற்கான அமைதி நீதிபதிகள் என்ற நகராட்சி அதிகாரத்தின் நிர்வாகத்தின் (பின்னர் கல்கத்தா மாநகராட்சி) கீழ் வந்தது. 1870 களில், தலைமை நீதிபதி ரிச்சர்ட் கோச் காலத்தில், உயர் நீதிமன்றத்தின் தற்போதைய கட்டடம் கட்டப்பட்டபோது, நகர மண்டபம் தற்காலிகமாக நீதித்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. 1871 ஆம் ஆண்டில், புஸ்னே நீதிபதிகளில் ஒருவரான சர் ஜான் பாக்ஸ்டன் நார்மன், நகர மண்டபத்தின் படிகளில் இறங்கி வரும் போது, ​​வஹாபி பிரிவைச் சேர்ந்த ஒரு மதவெறி கொண்ட முஸ்லீமால் படுகொலை செய்யப்பட்டார்.1897 ஆம் ஆண்டில், நகர மண்டபம் சுமார் ரூ. 1.1266 மில்லியன் செலவில் புதுப்பிக்கபட்டது.

1900–1947

[தொகு]

1914 ஆம் ஆண்டில், ராமநாத் தாகூரின் சிலை தவிர கிட்டத்தட்ட அனைத்து பளிங்கு சிலைகளும் விக்டோரியா நினைவிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 1919 இல் இரட்டை ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நகர மண்டபமானது வங்காள சட்ட மன்றத்தின் அவைக் கூடமாக பயன்படுத்தப்பட்டது. அவையின் தேவைகளுக்கு ஏற்ப மண்டபத்தின் உட்புறம் மாற்றியமைக்கப்பட்டது. அவைத் தலைவர் தனது அறையை நகர மண்டபத்திலேயே வைத்திருந்தார். பின்னர், 1931 இல் சட்டமன்றம் அதன் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.[1]

இரண்டாம் உலகப் போரின்போது, தற்காலிகமாக இந்த மண்டபத்தில் அரசாங்கம் ஒரு ரேஷன் அலுவலகத்தைத் திறந்தது.

விடுதலைக்குப் பிறகு

[தொகு]

இந்திய விடுதலைக்குப் பிறகு, நகர மண்டபக் கட்டிடம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. விடுதலைப் பெற்ற ஆரம்ப காலத்தில், 'சோசலிச காலத்தின்' போது இந்தக் கட்டடம் படிப்படியாக கூட்டு மறதிக்கு உள்ளானதாகத் தெரிகிறது. இது நகராட்சி மாஜிஸ்திரேட் அலுவலகமாக மாற்றப்பட்டது. மாநகராட்சியின் மற்ற பிரிவுகள் இதன் வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்டன. முனிசிபல் சர்வீஸ் கமிஷன் மற்றும் மேற்கு வங்க பொது சேவை ஆணையம் ஆகியவையும் கட்டிடத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்தன. 1975 ஆம் ஆண்டில், கிரீன்லா மற்றும் பால்மரின் மார்பளவுச் சிலைகளைத் தவிர அனைத்து பளிங்கு மார்பளவு சிலைகளும் சில உருவப்பட ஓவியங்களும் விக்டோரியா நினைவு மண்டபத்திற்கு மாற்றப்பட்டன. போர்ட்ரெய்ட் ஓவியங்களில் மீதமுள்ளவை மத்திய முனிசிபல் அலுவலக கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு நகர மண்டபத்தில் உள்ள ரியான் மற்றும் நாட்டின் இரண்டு உருவப்பட ஓவியங்கள் மட்டுமே எஞ்சி இருந்தனி. செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த அற்புதமான கட்டடம் படிப்படியாக பொதுச் சமூகத்தின் மறதிக்கு உள்ளானது. 1998 ஆம் ஆண்டில், ஏ.எஸ். ஐ மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சரியான நேரத்தில் தலையீட்டால், இந்த பாரம்பரிய கட்டிடம் மேலும் சேதம் மற்றும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது - பின்னர் அதன் பழைய பெருமைக்கு புதுப்பிக்கப்பட்டது, இப்போது பொதுக்கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நகர மண்டபம்

நகர மண்டப நூலகம்

[தொகு]

1999 ஆம் ஆண்டில், கொல்கத்தா பற்றிய அரிய புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் முழுத் தொகுப்பையும் கொண்டு ஒரு குறிப்புதவி நூலகத்தை உருவாக்குவதற்காக புகழ்பெற்ற கொல்கத்தா நிபுணர் பி.டி. நாயரிடம் இருந்து மாநகராட்சி வாங்கியது. 2004 ஆம் ஆண்டு, அப்போதைய மேயர் சுப்ரதா முகர்ஜி தலைமையில் நடைபெற்ற ஒரு விழாவில், நூலகத் துறை அமைச்சரான நிமாய் மல் அவர்களால் இந்த நூலகம் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. 2007 இல், மாநகராட்சியின் முழு குறிப்புதவி நூலகமும் நகர மண்டப நூலகத்துடன் இணைக்கப்பட்டது. இப்போது இந்த நூலகத்தில் சுமார் 12,000 புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளன. இந்த நூலகத்தில் உள்ள சில அரிய மதிப்புமிக்க புத்தகங்களுக்காக இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல அறிஞர்கள் இங்கு வருகை தருகின்றனர் இங்கு உள்ள சில அரிய நூல்கள்:[2]

  • Charles Ball. The History of Indian Mutiny.
  • The Diary of William Hedge.
  • Calcutta Light Horse – 1759-1881-1947.
  • A Claude Campbell. Glimpses of Bengal.
  • Catalogue of the Pictures and Sculptures in the collection of the Maharaja Tagore.
  • Wilmot Corfiled. Calcutta faces and places in pre-camera days.
  • Joseph Emin. The life and Adventures of Joseph Emin: an American.
  • E. d. Ezra. Turning back the pages: A chronicle of Calcutta Jewry.
  • Henry Hyde. Parochial Annals of Bengal.
  • Parish of Bengal, 1678 to 1788.
  • Charles Lushington. The history, design and present state of the benevolent and charitable institution, founded by the British in Calcutta and its vicinity.
  • Charles Moor. The Sheriffs of Fort William from 1775 to 1926.
  • Rabbi Ezekiel N Musleah on the Banks of the Ganga.
  • O Connell. The Park Street Cemeteries – Hand book of the Principle monuments.
  • The Outram Statue, Calcutta
  • D. L. Richarson. Literary Recreations.
  • Smoult & Ryan. Rules and orders of the supreme court of judicature at Fort William in Bengal.
  • Stark and Madge. East Indian worthies.
  • Willkinson. Two Monsoons.
  • William Bolts. Considerations on Indian Affairs.
  • Rev. Lal behari De. Recollections of Alexander Duff. (with author's signature)
  • Harry Hobbs. The Romance of the Calcutta sweep. (with author's copy)
  • Sir Upendranath Brahmachari. Gleanings from my researches: Kala-azar, its Chemotherapy.
  • Calcutta Exhibition, Official Hand Book and Guide. 1923.
  • Narendra Nath Laha. Subarnabanik, Katha O Kirthi.
  • Ramcomal Sen. Dictionary of English and Bengal.

இங்கு வாழ்கை குறிப்புகள், கல்கத்தா ரீவீவ், மார்டன் ரிவீவ், பெங்கால் பாஸ்ட் அண்ட் பிரசண்ட், ஜர்னல் ஆஃப் தி ஆசியாடிக் சொசைட்டி, கல்கத்தா நகராட்சி விவரக்குறிப்பேடு மற்றும் கல்கத்தா மாநகராட்சியின் பிற வெளியீடுகளும் உள்ளன.

கொல்கத்தா அருங்கட்சியகம்

[தொகு]
இரவில் நகர மண்டபம்

கொல்கத்தா அருங்காட்சியகம் கொல்கத்தா மாநகராட்சி மற்றும் மேற்கு வங்காள அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 1995 இல் அமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்டது. இது கொல்கத்தா நகரத்தின் வரலாற்றையும், அதனை ஒட்டிய பெருநகரத்தையும் சித்தரிக்கிறது. இது கொல்கத்தா அருங்காட்சியக சங்கத்தால் உருவாக்கப்பட்டது, இதில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள், அருங்காட்சியியலாளர்கள், இந்த மாநகராட்சியின் நிர்வாகிகள் உள்ளனர். கொல்கத்தா அருங்காட்சியகம் என்பது கொல்கத்தா நகரத்தின் வரலாறு குறித்த கதை சொல்லும் ஊடக கண்காட்சியாகும். இதற்கு கொல்கத்தா மாநகராட்சி, கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம், மேற்கு வங்காள அரசின் தகவல் மற்றும் கலாச்சாரத் துறை, ஃபோர்டு அறக்கட்டளை ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன. 1200 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தக் அருங்காட்சியகம், 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் கண்காட்சி, கொல்கத்தாவின் கதை, அதன் சமூக மற்றும் அரசியல் வரலாறு, கொந்தளிப்பான விடுதலை இயக்கம், கல்வி, இலக்கியம், இசை, கலை, அறிவியல் மற்றும் கலை ஆகிய துறைகளில் கல்கத்தாவின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை சித்தரிக்கிறது. தொழில்நுட்பம். தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் உதவியால் அனிமேட்டட் வாக்-த்ரூ டியோராமாக்கள் உருவாக்கபட்டுள்ளன. அதில் பார்வையாளர்கள் ஆரம்பகால கல்கத்தா தெருக்களில் நடந்து செல்கிறார்கள் அல்லது பிளாசி போரின் போர்க்களத்தின் மையத்தில் இருந்தபடி அந்த போரின் சித்தரிப்பைக் காணலாம். இந்திய விடுதலை இயக்கத்தின் 12 நிமிடக் கதை பார்வையாளர்களைச் சுற்றியுள்ள பெரிய வட்டத் திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. அதில் கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான இரவீந்திரநாத் தாகூர் 'பாரத் தீர்த்தா' ஓதுவதையும் 'தோபு மோனே ரேகோ' பாடுவதையும் பார்வையாளர்கள் அனிமேட்ரானிக்ஸ் உதவியுடன் காணலாம். பார்வையாளர்கள் மற்றவர்களின் குறுக்கிடுகளைத் தவிர்த்து ஆடியோ ஐசோலேட்டர்கள் மூலம் பழைய காலத்தின் பிரபலமான இசையைக் கேட்கலாம் அல்லது பிரமதேஷ் பருவா, தேபாகி போஸ், மது போஸ், சத்யஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டக் போன்றவர்களின் படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட துண்டுப் படங்களைப் தேர்வு செய்யது பார்க்கலாம்.

பரவலர் பண்பாட்டில்

[தொகு]

இந்த நகர மண்டபம் கொல்கத்தாவின் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான அடையாளமாகும். பிரித்தானியப் பேரரசு காலத்தில் கல்கத்தாவில் சமூகக் கூட்டங்கள் நடக்கும் முக்கிய இடமாக நகர மண்டபம் இருந்தது. மேலும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பல முக்கிய அரசு விழாக்கள் இங்கு நடைபெற்றன. இந்த மண்டபம் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பல வரலாற்று பிரகடனங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் சாட்சியாக உள்ளது. இது ஐரோப்பியர்களால் பொதுக் கூட்டங்களுக்கான ஒரு உயரடுக்கு இடமாக கருதப்பட்டது. தற்போது மேற்கு வங்காள அரசின் பல நிகழ்வுகள் இங்கு நடத்தப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kolkata Town Hall
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Municipal Calcutta – Its Institutions in their origin and growth – Compiled by S.W. Goode, First published in 1916 at Edinburgh and Reprinted in 2005 by Kolkata Municipal Corporation.
  • Calcutta Old & New by H.E.A Cotton, 1909, Calcutta.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்கத்தா_நகர_மண்டபம்&oldid=4116848" இலிருந்து மீள்விக்கப்பட்டது