கொலம்பிய கம்பளி யானை

கொலம்பிய கம்பளி யானை அல்லது கொலம்பிய மாமூத் (Columbian mammoth) என்பது கம்பளி யானைகள் இனத்தச் சேர்ந்த ஓர் யானை வகை ஆகும். இவ்வகை கம்பளி யானைகள் வட அமெரிக்கக் கண்டத்தில் பொதுவாக வட ஐக்கிய அமெரிகாவிலும், கொஸ்தாரிக்காவிலும் வாழ்ந்து வந்தன. இறுதியாக வாழ்ந்து வந்த கம்பளி யானைவகைகளில் இவையும் ஒன்றாகும். 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆசியாவின் ஸ்டெப்பேயில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த ஓர் கம்பளி யானை இனத்தில் இருந்தே கொலம்பிய கம்பளி யானைகள் எனும் இனம் புதிதாக உருவாகியது. கலிபோர்னியாவின் சனல் தீவுகளில் வாழ்ந்து வந்த பிக்மை கம்பளி யானைகள் இக்கம்பளி யானை இனத்தில் இருந்தே பரிணாமத்திற்கு உள்ளாகித் தோற்றம் பெற்றது. இவ்வகை யானைகளை ஒத்ததாகவே தற்போதைய ஆசிய யானைகள் காணப்படுகின்றன.
தோற்றம்
[தொகு]இவ்வகை யானைகளின் சராசரி உயரம் நான்கு மீற்றர்கள் ஆகும்.[1] அத்துடன் பொதுவாக இவை எட்டு தொடக்கம் பத்து தொன்கள் எடையில் காணப்பட்டன. பொதுவாக இவ்வகைக் கம்பளி யானைகளில் ஆண் யானைகளே மிகவும் பெரியவையாகவும் இறுக்கமான சுபாவம் உள்ளனவாகவும் இருந்தன. இவற்றின் தந்தங்கள் மிகவும் நீளமானவையாகும். கண்டெடுக்கப்பட்ட தந்தங்களுள் மிகப்பெரிய தந்தத்தின் நீளம் 4.9 மீற்றர்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kurten, B.; Anderson, E. (1980). Pleistocene Mammals of North America. New York: Columbia University Press. pp. 348–354. ISBN 9780231037334.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Mammoth Mystery – Nova documentary about the fighting mammoths of Nebraska
- Footage showing removal of a Columbian mammoth skull at the Hot Springs Mammoth Site