உள்ளடக்கத்துக்குச் செல்

கொய்டெர் லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொய்டெர் லாகசு (Koitere Lacus ) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 79.4° மற்றும் 36.14° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் டைடனின் வடதுருவத்தில் டைட்டனின் பெரும்பாலான ஏரிகள் உள்ள இடத்தில் இந்த ஏரி காணப்படுகிறது [2] நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள பின்லாந்து நாட்டிலுள்ள கொய்டெர் ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு கொய்டெர் லாகசு என்று பெயரிடப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. Map of the liquid bodies in the north polar region of Titan.
  2. "Koitere Lacus". USGS planetary nomenclature page. USGS. பார்க்கப்பட்ட நாள் 2015-05-23. {{cite web}}: External link in |work= (help)
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துCoustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்டெர்_லாகசு&oldid=3083519" இலிருந்து மீள்விக்கப்பட்டது