உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சி சமணக் கோயில்

ஆள்கூறுகள்: 9°57′43″N 76°15′16″E / 9.96194°N 76.25444°E / 9.96194; 76.25444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சி சமணக் கோயில்
தருமநாதர் சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மட்டாஞ்சேரி, கொச்சி, கேரளம்
புவியியல் ஆள்கூறுகள்9°57′43″N 76°15′16″E / 9.96194°N 76.25444°E / 9.96194; 76.25444
சமயம்சைனம்
இணையத்
தளம்
jaintemplecochin.org

கொச்சி சமண கோயில் (Kochi Jain temple) அல்லது தருமநாதர் சமணக் கோயில் என்பது கேரளாவின் கொச்சியில் உள்ள மட்டாஞ்சேரியில் உள்ள ஒரு சமணக் கோவிலாகும்.

கோயிலைப் பற்றி

[தொகு]

வரலாற்று ரீதியாக, கச்சு, சௌராட்டிரா பகுதிகளைச் சேர்ந்த சமணர்கள் வணிகத்திற்காக கோழிக்கோடு ,ஆலப்புழா போன்றப் பகுதிகளுக்கு வந்தனர். இந்த கோயில் 1904 ஆம் ஆண்டில் (விக்ரம் நாட்காட்டி 1960) தனது கணவர் ஜிவ்ராஜ் தன்ஜியின் நினைவாக இருபாய் ஜிவ்ராஜ் தன்ஜி இந்தக் கோவிலைக் கட்டினார். இந்த கோயில் இந்தியாவின் முக்கிய சமண யாத்ரீக தலங்களில் ஒன்றாகும். [1] [2] கோயிலின் மூல சிலையாக 15 வது தீர்த்தங்கரரான தருமநாதரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. [3] கோயில் கட்டிடக்கலை குசராத்து சமணக் கோவிகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளது. [4] கோயில் வளாகத்திற்குள் சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு சமணக் கோயிலும் உள்ளது. [5]

திருவிழா

[தொகு]

சமணர்களின் மிக முக்கியமான வருடாந்திர புனித நிகழ்வான பர்யுசணா திருவிழா ஆண்டுதோறும் எட்டு நாள் சுய சுத்திகரிப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. [5]

குறிப்புகள்

[தொகு]

பொது ஆதாரங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kochi Jain Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_சமணக்_கோயில்&oldid=3315197" இலிருந்து மீள்விக்கப்பட்டது