கைலாஷோ தேவி சைனி
கைலாஷோ தேவி சைனி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | குருச்சேத்திரம் (மக்களவைத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 ஏப்ரல் 1962 |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஓம் நாத் சைனி |
தொழில் | விவசாயி, அரசியல்வாதி, சமூகசேவகர், ஆசிரியர், வர்த்தகர் |
இணையத்தளம் | kailashosaini.com |
கைலாஷோ தேவி சைனி (Kailasho Devi Saini) (பிறப்பு:4 ஏப்ரல் 1962) ஓர் அரசியல்வாதியும் சமூக சேவகருமாவார். இவர் இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள குருச்சேத்திரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]
கைலாஷோ, குருச்சேத்திரம் மாவட்டத்தின் பிரதாப்கரில் பிறந்தார். இவர் ஓம் நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கைலாஷோ உடற்கல்வி மற்றும் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.[1]
தொழில்[தொகு]
அரியானாவிலுள்ள யமுனா நகர், குருச்சேத்திரம், கைத்தல் மாவட்டங்களில் உள்ள சாமானியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கைலாஷோ செயல்பட்டு வருகிறார். மாணவப் பருவத்தில் கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக இவர் பல விருதுகளை வென்றுள்ளார் .[1]
ஆர்வங்கள்[தொகு]
கைலாஷோவின் ஆர்வத்தில் இசை கேட்பது, தியானம் செய்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை அடங்கும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)