கே. வரதராஜன்
கே. வரதராஜன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 அக்டோபர் 1946 |
இறப்பு | 16 மே 2020 கரூர், தமிழ்நாடு | (அகவை 73)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
கே. வரதராஜன் (K. Varadarajan) (அக்டோபர் 4,1946-மே 16,2020) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் குழு உறுப்பினராக இருந்தார்.[1]
வாழ்க்கை
[தொகு]கே. வரதராஜன் அக்டோபர் 4,1946 அன்று பிறந்தார்.[2] இவர் 16 மே 2020 அன்று தமிழ்நாட்டின், கரூரில் காலமானார். [2]
இவர் குடிசார் பொறியியலில் பட்டயப் படிப்பை படித்துள்ளார் .[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]விவசாயத் தலைவர்
[தொகு]விவசாய ஆர்வலரான கே. வரதராஜன் அகில இந்திய விவசாயிகள் மன்றத் தலைவராக இருந்துள்ளார்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் (அல்லது தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்கத்தின்) பல போராட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கினார். மேலும், குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.[4]
- திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளராக 1974 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5]
- தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க செயலாளராக 1986 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5]
- 1998 இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [6]
கம்யூனிஸ்ட் தலைவர்
[தொகு]கே. வரதராஜன் 1968 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரானார்.[2]
1975 முதல் 1977 வரை நெருக்கடி நிலை காலகட்டத்தில் இவர் தலைமறைவாக இருந்தார்.[3]
இவர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இறக்கும் வரை மார்க்சிய இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A combination of class, caste struggle must for Dalits’ emancipation, says CPI(M)". The Hindu. 28 February 2008 இம் மூலத்தில் இருந்து 4 March 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080304010422/http://www.hindu.com/2008/02/28/stories/2008022853740500.htm. பார்த்த நாள்: 2009-04-02.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "മുതിര്ന്ന സി.പി.എം. നേതാവ് കെ. വരദരാജന് അന്തരിച്ചു". Mathrubhumi (in ஆங்கிலம்). Retrieved 2020-05-16.
- ↑ 3.0 3.1 "തമിഴ്നാട്ടിലെ സിപിഎമ്മിന്റെ പ്രമുഖനേതാവ് കെ വരദരാജൻ അന്തരിച്ചു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). Retrieved 2020-05-16.
- ↑ Gaur, Mahendra. (2006). Indian affairs annual, 2006 : chronology of events (1 April 2005 to 31 March 2006). Delhi: Kalpaz Publications. ISBN 81-7835-529-9. OCLC 476698479.
- ↑ 5.0 5.1 "മുതിർന്ന സിപിഐ എം നേതാവ് കെ വരദരാജൻ അന്തരിച്ചു". Deshabhimani (in மலையாளம்). Retrieved 2020-05-16.
- ↑ "All India Kisan Sabha General Secretary, K. Varadarajan addressing a public meeting in Hyderabad on... | The Hindu Images". thehinduimages.com. Retrieved 2020-05-16.