கே. ஜி. அதியோதி
Appearance
மருத்துவர் கே. ஜி. அதியோதி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், கேரளா | |
தொகுதி | கல்பற்றா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1927 |
இறப்பு | 22 அக்டோபர் 1987 | (அகவை 60)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாதவிகுட்டி அம்மா |
மருத்துவர் கே. ஜி. அதியோதி (K. G. Adiyodi)(2 சனவரி 1927 – 22 அக்டோபர் 1987) என்பவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள அரசின் நிதி, வனம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்தார்.[1] இவர் பெராம்பிரா மற்றும் கல்பற்றாவிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
கே. ஜி. அதியோதி, சந்து கிடாவ் மற்றும் மாதவி அம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். இவர் ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்று பணியாற்றினார். மாதவிக்குட்டி அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.[1]
வகித்தப் பதவிகள்[தொகு]
- உணவு மற்றும் வனத்துறை அமைச்சர் (25-09-1971 முதல் 15 மே 1972)
- நிதி அமைச்சர் (16-05-1972 முதல் 25 திசம்பர் 1975)
- வனம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் (26-02-1975 முதல் 25 மார்ச் 1977)
- மக்களவை உறுப்பினர் (1984–1987)
- அகில இந்திய காங்கிரசு குழு உறுப்பினர் AICC
- தலைவர், கேரள பொது பணி ஆணையம்
- தலைவர், (செயல்) கேரள மாநில காங்கிரசு குழு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.