உள்ளடக்கத்துக்குச் செல்

கே. செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. செல்வராஜ்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னையவர்மு. இராமநாதன்
பின்னவர்சி. டி. தண்டபாணி
தொகுதிகோயம்புத்தூர் மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
இறப்பு(2024-11-08)8 நவம்பர் 2024 (அகவை 66)
திருப்பதி,
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஅரசியல்வாதி

கோவை செல்வராஜ் என்கிற கே. செல்வராஜ் (இறப்பு: 8. நவம்பர். 2024) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் தி.மு.கவின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக இருந்தார்.[2]

செல்வராஜ் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் ஆர். எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர். முதலில் அ.தி.மு.கவில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய செல்வராஜ், 1984 இல் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.[3] 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் காங்கிரசின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினராக மாறி, அதிமுகவின் ஆதரவாளராக செயல்பட்டார். 2006 இல் சேவாதள அமைப்பின் தலைவராக இருந்தார். காங்கிரசு-திமுக கூட்டணியை விமர்சித்த காரணத்தால் 2015 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் செல்வராஜ் அ.தி.மு.கவில் இணைந்தார். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த செல்வராஜ், அதிமுகவை விட்டு வெளியேறி 2022 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அதன்பிறகு தி.மு.கவின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக இருந்தார்.

குடும்பம்

[தொகு]

செல்வராஜுக்கு கமலாமணி என்ற மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். திருப்பதியில் இவரது மூன்றாவது மகனின் திருமணத்தை முடித்துவிட்டு ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 2024 நவம்பர் 8 அன்று தன் 66 வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bureau, DTNEXT (2024-11-08). "Ex-MLA Kovai Selvaraj dies of cardiac arrest in Tirumala; CM Stalin condoles demise". www.dtnext.in (in ஆங்கிலம்). Retrieved 2024-11-10. {{cite web}}: |last= has generic name (help)
  2. DIN (2024-11-08). "முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்!". Dinamani. Retrieved 2024-11-10.
  3. Bureau, The Hindu (2024-11-09). "Former Tamil Nadu legislator Kovai Selvaraj dies of cardiac arrest". The Hindu (in Indian English). Retrieved 2024-11-10. {{cite web}}: |last= has generic name (help)
  4. "முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்". Hindu Tamil Thisai. 2024-11-08. Retrieved 2024-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._செல்வராஜ்&oldid=4148685" இலிருந்து மீள்விக்கப்பட்டது