கே. சந்துரு
Appearance
கே. சந்துரு | |
---|---|
![]() | |
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 31 சூலை 2006 – 8 மார்ச் 2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 மே 1951 திருவரங்கம், தமிழ்நாடு |
துணைவர் | பாரதி |
கே. சந்துரு (K. Chandru) கிருஷ்ணசாமி. சந்திரசேகரன் ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆவார். ஆறாண்டுகளுக்கு மேல் நீதிபதியாக இருந்த காலத்தில் 90000 வழக்குகளை உசாவி தீர்ப்பு வழங்கியவர். சமூகச் சிந்தனையும் அக்கறையும் கொண்டு இயங்குபவர்.
இளமை காலம்
[தொகு]- கே.சந்துரு என்கிற கிருஷ்ணசாமி சந்திரசேகரன் இவர் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணசாமி–சரஸ்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு "சுந்தரேசன்" என்ற ஒரு தம்பியும் பாரதி என்கிற மனைவியும் உள்ளனர்.
- இவர் தந்தை கிருஷ்ணசாமி தாயார் சரஸ்வதி அவர்களுக்கு வெகுநாட்களாக பிள்ளைவரம் இல்லாமல் திருச்சி மலைக் கோட்டை இறைவன் தாயுமானவர் சுவாமி அருளால் பிறந்ததால் இவருக்கு தாயுமானவர் சுவாமியின் திருவடி பெயரான சந்திரசேகரன் என்ற பெயரை அவரது பெற்றோர்கள் சூட்டினர்.
- சந்துருவின் 5 ஆவது வயதில் தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்தார். தந்தை பிரிவை தாங்க இயலாத நேரத்தில் தனது 15ஆவது வயதில் தாயார் சரஸ்வதியும் இறந்து போனார்.
- பிறகு தனது சிறுவயதிலே பெற்றோரை இழந்த சந்துரு தனது அன்பு தம்பி சுந்தரேசனும் வளரும் வயதில் இறந்தார்.
- பின்பு சந்துரு தம் கல்வியைச் சென்னையில் உள்ள பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றார் 25-12 1968 அன்று வெண்மணி என்னும் சிற்றூரில் நடந்த 44 தாழ்த்தப்பட்ட மக்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிகழ்ச்சியைக் கண்டித்து விவசாயத் தொழிலாளர்களின் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.
- இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார் அப்போது சென்னையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
சட்டத் தொழில்
[தொகு]சட்டக் கல்வியைப் படித்து 1976 இல் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். 1997 இல் சீனியர் வழக்கறிஞர் ஆனார்.பல பொது நல வழக்குகள் மனித உரிமை வழக்குகள் பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடினார். 31-07-2006 இல் உயர் நீதி மன்ற நிதிபதி ஆனார். நீதிமன்றங்களில் மை லார்டு என்று விளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொன்னார். 8-3-2014 இல் ஒய்வு பெற்றார்.
முக்கியத் தீர்ப்புகள்
[தொகு]- கோவில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம்.
- சாதி பாகுபாடு இல்லாமல்எல்லாருக்கும் ஒரே சுடுகாடு வேண்டும்
- சத்துணவுக் கூடங்களின் பணிகளில் சாதி வாரி ஒதுக்கீடு தேவை.
- கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு வழிபாட்டு உரிமை உண்டு.
- மாட்டிறைச்சிக் கடைகள் நடத்த தடை இருந்ததை நீக்கிய தீர்ப்பு.
- சிறுமிகள் மீது இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைக் களைய அரசுக்கு உத்தரவு இட்ட தீர்ப்பு
- சாதி மறுப்புத் திருமணம் மதக்கலப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு ஏற்படும் தடைகளுக்கு எதிரான தீர்ப்பு.
- பஞ்சமி நிலங்களை ஆதிக்க சக்திகளிலிருந்து மீட்டுத் தாழ்த்தப்பட்ட உழவர்களுக்கு மீண்டும் வழங்க ஆணை இட்ட தீர்ப்பு.
எழுதிய நூல்கள்
[தொகு]- Living Legend and Labour Jurisprudence
- அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்