உள்ளடக்கத்துக்குச் செல்

கே. ஓ. ஆயிசா பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.ஓ. ஆயிசாபாய்
K. O. Aysha Bai
முதல் துணை சபாநாயகர், கேரள சட்டசபை
பதவியில்
6 மே 1957 – 31 சூலை 1959
முன்னையவர்அலுவலகம் உருவாக்கப்பட்டது.
பின்னவர்ஏ. நபீசாத்து பீவி
தொகுதிகாயங்குளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-10-25)25 அக்டோபர் 1926
இறப்பு(2005-10-28)28 அக்டோபர் 2005
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்கே. அப்துல் ரசாக்கு
முன்னாள் மாணவர்
  • பெண்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்
  • எர்ணாகுளம் சட்டக் கல்லூரி

கே. ஓ. ஆயிசா பாய் (K. O. Aysha Bai) இந்தியாவின் தென்பகுதியில் வாழ்கின்ற பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆய்சா பாய் என்றும் இவர் அழைக்கப்படுவதுண்டு. [1] 1926 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் இவர் பிறந்தார். 1957 ஆம் ஆண்டு மே மாதம் 6 அம் தேதி முதல் 1959 ஆம் ஆண்டு சூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் கேரள சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக ஆயிசா பணிபுரிந்தார். கேரள சட்டமன்றத்தின் முதல் துணை சபாநாயகர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. [1][2][3] நவீன கேரளாவில் மக்களிடம் புகழ் பெற்ற முதல் இசுலாமியப் பெண்ணும் ஆயிசாவே என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாப்பிளமார் வகை இசுலாமியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒரு தைரியமான வழக்கறிஞராக ஆயிசா செயல்பட்டார். [1] கேரள மகளிர் சங்கங்களின் முன்னோடி அமைப்பாளராகவும் இவர் இருந்தார். [4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கே.எசு. உசுமான் சாகிப் மற்றும் பாத்திமா பீவி தம்பதியருக்கு ஆயிசா மகளாகப் பிறந்தார்.[2] கே. அப்துல் ரசாக் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் 2 மகள்களும் பிள்ளைகளாகப் பிறந்தனர்.[3]

தனது கல்வியை திருவனந்தபுரத்திலுள்ள மகளிர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் ஆயிசா முடித்தார். எர்ணாகுளம் நகரில் தனது சட்டப் படிப்பை நிறைவு செய்தார்.[2]). 1947 ஆம் ஆண்டு இவர் மாணவர் காங்கிரசில் பங்கேற்றார்.[3]

1953ஆம் ஆண்டில் ஆயிசா இந்திய பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.[1] கயம்குளம் தொகுதியில் போட்டியிட்டு 1957ஆம் ஆண்டில் கேரள சட்டமன்றத்திற்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை கேரள சட்டமன்றத்தில் ஆயிசா பணியாற்றினார். 1957ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1959ஆம் ஆண்டு சூலை மாதம் வரை சட்டமன்ற துணை சபாநாயகராக பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழுவின் தலைவராக பணியாற்றினார்.[2] கேரள மகளிர் சங்கத்தில் ஆயிசா மாநில துணைத் தலைவராக பொறுப்பில் இருந்தார். கேரள மகிளா சங்கம் – இந்தியப் பொதுவுடமைக் கட்சி உறுப்பினர், மத்திய மற்றும் மாநில சமூக நல வாரியங்கள் போன்ற அமைப்புகளிலும் இவர் உறுப்பினராகச் செயல்பட்டார். [2][3]

2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 அன்று ஆயிசா காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Miller, R. E. "Mappila" in The Encyclopedia of Islam Volume VI. Leiden E. J. Brill 1988 p. 458–66
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "K. O. Aysha Bai". Niyama Sabha. Retrieved 11 August 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 K. O. Aysha Bai Official Profile Kerala Niyama Sabha
  4. Miller, E. Roland. "Mappila Muslim Culture" State University of New York Press, Albany (2015)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஓ._ஆயிசா_பாய்&oldid=3189468" இலிருந்து மீள்விக்கப்பட்டது