உள்ளடக்கத்துக்குச் செல்

கே. ஏ. செங்கோட்டையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஏ. செங்கோட்டையன்
பள்ளிக் கல்விதுறை அமைச்சர்
பதவியில்
16 மே 2017 – 7 மே 2021
வேளான்துறை அமைச்சர்
பதவியில்
15 மே 2011 – 14 ஜூலை 2011
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
பதவியில்
15 ஜூலை 2011 – 7 நவம்பர் 2012
போக்குவரத்துத்துறை அமைச்சர்
பதவியில்
24 ஜூன் 1991 – 1996
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1977-1980,

1980-1984, 1984-1989, 1989-1991, 1991-1996, 2006-2011, 2011-2016,

2016-
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சனவரி 1948 (1948-01-09) (அகவை 77)
குள்ளம்பாளையம், சென்னை மாநிலம், இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்
கல்விநடுநிலைப்பள்ளி
சமயம்இந்து சமயம்

கே. ஏ. செங்கோட்டையன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்திலிருந்தும், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக செயலலிதா அணி, சானகி அணி என பிரிந்திருந்த போது செயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார்.[2] தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வ‌ந்தா‌ர்.[3][4]

2012 ஆண்டு செங்கோட்டையனின் மனைவி ஈஸ்வரியும், அவரது மகன்  கதிரீஸ்வரனும், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து,” செங்கோட்டையன்  வீட்டுக்கே வருவதில்லை;  தனது பி.ஏ.ஆறுமுகத்தின் வீட்டிலேயே  உள்ளார்!”  என  செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக புகார் கூறியதாகவும், இதையடுத்து  ஜெயலலிதா, செங்கோட்டையனை அழைத்து மிகக் கடுமையாக எச்சரித்ததாகவும்  அதிமுக வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செங்கோட்டையனுடனான நெருக்கத்தின் காரணமாக ஆறுமுகம் மற்றும் அவரது  தரப்பு நடிகை சுகன்யாவோடு[5] பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.[6] இதன்பிறகு 2016 டிசம்பர் 5இல் ஜெயலலிதா மறைவு வரை அவர் அமைச்சரவை, கட்சி பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் ஆகியவற்றிலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.

2017 ஆண்டு பெப்ரவரி மாதம் எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[8]

இவரின் தந்தை அர்த்தனாரிக்கவுண்டர், மனைவி ஈசுவரி, மகன் கதிர் ஆவார்கள்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2011-12-10.
  2. வனத்துறை போக்குவரத்துத் துறை
  3. வெப்துனியா
  4. வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துற இதன்பிறகு ஜெயலலிதா மறைவு வரை செங்கோட்டையன் புறக்கணிக்கப்பட்டார்.ை , வருவாய்த் துறை - விகடன்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Hemavandhana (2024-12-08). "பிரபல நடிகை சுகன்யா.. அந்த அரசியல்வாதியா? சர்ச்சைகளை உடைத்து, நடிப்பில் உச்சம் தொட்டு: யார் பாருங்க". https://tamil.oneindia.com. Retrieved 2025-02-13. {{cite web}}: External link in |website= (help)
  6. Correspondent, Vikatan (2012-07-19). "செங்கோட்டையன் பதவி பறிப்பு ஏன்?". https://www.vikatan.com/. Retrieved 2025-02-13. {{cite web}}: |last= has generic name (help); External link in |website= (help)
  7. http://www.tn.gov.in/ta/ministerslist
  8. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
  9. http://www.elections.tn.gov.in/Affidavits/106/SENGOTTAIYAN_KA.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._செங்கோட்டையன்&oldid=4208671" இலிருந்து மீள்விக்கப்பட்டது