கேழ்வரகுக் களி
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | தென்னிந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | கேழ்வரகு |
கேழ்வரகுக் களி என்பது நன்கு அரைத்த கேழ்வரகு மாவை கொதிநீரில் இட்டு கிளறி உருண்டையாக வார்த்துச் செய்யப்படும் உணவு வகையாகும். இது கர்நாடக மாநில கிராமப்புறங்களில் முக்கிய உணவாக உள்ளது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இவ்வுணவு ”ராகி களி” என அழைக்கப்படுகிறது. இக்களியில் சேர்க்கப்படும் பொருள்கள் இடத்துக்கிடம் சற்று மாறுபடும்.
தேவையான பொருட்கள்
[தொகு]கேழ்வரகு மாவு - 200 கிராம், அரிசி நொய் - 100 கிராம், தண்ணீர் - 450 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
[தொகு]சற்று கனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி சூடேற்றி அந்நீரில் அரிசிநொய் (அ) கம்புநொய் இட்டு சிறிது வேக விடவேண்டும். அதில் கேழ்வரகு மாவைக் இடவும். நீர் கொதித்தபின் தட்டையான பாத்திரத்தால் மூடி மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். ஆவியில் நன்கு வெந்தவுடன 2 (அ) 3 நிமிடம் மரக்கரண்டியால் கட்டடியில்லாமல் கிளரவேண்டும். பாத்திரத்தில் மாவு ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பயன்படுத்த வேண்டும்.[1], [2]
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- கொங்கு ராகி களி (தினகரன்) பரணிடப்பட்டது 2015-03-21 at the வந்தவழி இயந்திரம்
- http://www.hindu.com/mp/2008/06/21/stories/2008062152710700.htm பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம்
- [1]