கேரள மாநில மின்சார வாரியம்
![]() | |
வகை | அரசுச் சார் தொழில் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | மார்ச் 31, 1957 |
தலைமையகம் | திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | கேரளம், இந்தியா |
தொழில்துறை | மின் உற்பத்தி, பரிமாற்றம், வினியோகம் |
உற்பத்திகள் | மின்சாரம் |
இணையத்தளம் | kseb.in |
வரையறுக்கப்பட்ட கேரள மாநில மின்சார வாரியம் (Kerala State Electricity Board Ltd.), கேரள அரசின் கீழுள்ள ஒரு பொது முகமையாகும். மாநிலத்தில் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் வினியோகம் ஆகியன செய்யும் இவ்வாரியம், 1957-ல் உருவாக்கப்பட்டதும், மாநில மின்சக்தித்துறையின் அதிகாரத்திற்குள் வருவதுமாகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]1957, மார்ச் 7, அரசாணை எண்: EL-6475/56/PW-ன் படி கெ.பி.ஸ்ரீதரகைமள் என்பவரின் தலைமையில், ஐந்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இந்த தொழில் நிறுவனம் தொடங்கப்பட்டது. திரு கொச்சி மின்சாரத் துறையின் அலுவலர்கள் பின் இவ்வாரியத்திற்கு மாற்றப்பட்டார்கள். ஆரம்ப காலமான 1958-ல் 109.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டிருந்தது. அதன் பின் மின்சாரத் தேவைக் கூடியதால் மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டி வந்தது. தற்போது வாரியத்திற்கு அநேகம் நீர்மின் திட்டங்கள் உள்ளன. 2008-ன் கணக்கின்படி 2657.24 மெகாவாட் மின்சாரம், வாரியம் பல்வேறுத் திட்டங்கள் வாயிலாக உற்பத்தி செய்கிறது. ஏறக்குறைய 91,59,399 பயனர்கள் தற்போது உள்ளனர்.
உற்பத்தி
[தொகு]வாரியத்திற்கு 23 நீர்மின் திட்டங்களும், இரண்டு அனல்மின் திட்டங்களும், ஒரு காற்றாலையும் உள்ளது
அவைகள்
- நீர்மின் திட்டங்கள் (1940.2 MW)
- இடுக்கி (780.00 MW)
- சபரிகிரி (335 MW)
- இடமலையார் (75 MW)
- சோலயார் (54 MW)
- பள்ளிவாசல் (37.5 MW)
- குட்டியாடி (225 MW)
- பன்னியார் (30 MW)
- நேரியமங்களம் (77.65 MW)
- பெரியார் தாழ்வாரம் (180 MW)
- பெரிங்கல்குத்து மற்றும் PLBE (43 MW)
- செங்குளம் (48 MW)
- காக்காடு (50 MW)
- சிறு நீர்மின் திட்டங்கள் (52.85 MW)
- கல்லடா (15 MW)
- பேப்பாற (3 MW)
- மலங்கரா (10.5 MW)
- மாட்டுபட்டி (2 MW)
- மலம்புழா (2.5 MW)
- மீன்முட்டி தாழ்வாரம் (3.5 MW)
- செம்புக்கடவு - 1 (2.7 MW)
- செம்புக்கடவு - 2 (3.7 MW)
- உருமி -1 (3.75 MW)
- உருமி-2 (2.4 MW)
- குட்டியடி Tail Race (3.75 MW)
- பீசி (1.25 MW)
- அனல்மின் திட்டங்கள் (234.6 MW)
- பிரம்மபுரம் அனல் மின் நிலையம் (106.6 MW)
- கோழிக்கோடு அனல்மின் நிலையம் (128 MW)
- காற்றாலை (2 MW)
- கஞ்சிக்கோடு காற்றாலை (2 MW)
பரிமாற்றம்
[தொகு]கேரள மின்சக்தி கம்பி வலையமைப்பு தென்னகப் பகுதி மின்பரிமாற்ற அமைப்புடன் இரண்டு 400 kv இரட்டை மின்சுற்று இணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது.
அவைகள்
- உடுமலைப்பேட்டை - மடக்கத்தரா இணைப்பு மற்றும்
- திருநெல்வேலி - பள்ளிப்புரம்(திருவனந்தபுரம்) இணைப்பு
220 kv மற்றும் 110 kv நிலைகளிலான 6 முக்கிய வெளிமாநில மின்பரிமாற்ற இணைப்புகள் உள்ளன.
220 kv இணைப்புகள்:
- கனியம்பேட்டை - கடகோலா(ஒற்றை சுற்று)
- இடுக்கி - உடுமலைப்பேட்டை (ஒற்றை சுற்று)
- சபரிகிரி - தேனி (ஒற்றை சுற்று
- எடமொன்-திருநெல்வேலி(இரட்டை சுற்று)
110 kv இணைப்புகள் பாரசாலை-குழித்துறை மற்றும்
- மஞ்சேஸ்வரம்-கொனகே
முதன்மை துணை மின்நிலையங்களில் நான்கு 400kv துணை நிலையங்களும், பதினேழு 220kv துணை நிலையங்களும் உட்படும். முக்கிய மின் கம்பி இணைப்புகள் 220kv -ஐ கொண்டதாகும்.
வாரியத்தின் மின்பரிமாற்றம் வட மற்றும் தேன் மண்டலங்கலாக பிரிக்கப்படுள்ளது.
மாநில மின்சுமை அனுப்புகை மையம்(SLDC) கலமசேரியில் அமைந்துள்ளது.
Capacity | துணை நிலையங்களின் எண்ணிக்கை | மின்சுற்று Km-ல் நீலம் | Reliability Index |
---|---|---|---|
400 kV | 4* | 378** | 99.96 |
220 kV | 17 | 2701.38 | 97.75 |
110 kV | 129 | 4004 | 98.25 |
66 kV | 83 | 2387 | 97.86 |
33 kV | 114 | 1430 | 92.99 |
*400 kV துணை நிலையம், பள்ளிப்புரம்-திருவனந்தபுரம், **பள்ளிக்கர-கொச்சி மற்றும் பாலக்காடு PGCIL உடமையில் வருவதாகும். திருச்சூர் மடக்கத்தரா 400 kv துணை மின்நிலையம் கேரளத்தின் முதல் 400 kv துணை மின்நிலையம் ஆகும்.
வினியோகம்
[தொகு]வாரியம் கேரள மாநிலத்தில், திருச்சூர் மாநகராட்சி மற்றும் மூனாறு (கண்ணன் தேவன் குன்றுகள் தவிர்த்து மாநிலம் முழுமைக்கும் மின் வினியோகம் செய்கிறது. வினியோகத் தேவைகளுக்காக வாரியம் மூன்று தலமாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை தேன் மண்டலம், மத்திய மண்டலம், வடக்கு மண்டலம்.
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ இணையதளம்
- ORUMA: the result of KSEB’s concerted efforts: 'தி இந்து' பரணிடப்பட்டது 2008-03-13 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ History of Electricity in Kerala, Dr. D. Shina
- ↑ "Kerala State Electricity Board Limited – KSEBL Overview". www.kseb.in. Retrieved 2019-06-05.
- ↑ "PM inaugurates Pugalur-Thrissur HVDC project". The Hindu. 19 February 2021. https://www.thehindu.com/news/national/kerala/pm-inaugurates-pugalur-thrissur-hvdc-project/article33882226.ece.