கேம்சந்த் யாதவ்
கேம்சந்த் யாதவ் | |
---|---|
உயர் கல்வித்துறை, அறிவியல் தொழில்நுட்பம் சத்தீசுகர் அரசு | |
பதவியில் 8 திசம்பர் 2008 – 8 திசம்பர் 2013 | |
முன்னையவர் | அஜய் சந்த்ரகார் |
பின்னவர் | பிரேம் பிரகாஷ் பாண்டே |
நீர்வள அமைச்சர் சத்தீசுகர் அரசு | |
பதவியில் 7 திசம்பர் 2003 – 8 திசம்பர் 2013 | |
முன்னையவர் | தானேஷ் பட்டியாலா |
பின்னவர் | பிரிஜ்மோகன் அகர்வால் |
போக்குவரத்து துறை அமைச்சர் சத்தீசுகர் அரசு | |
பதவியில் 6 சூலை 2004 – 8 திசம்பர் 2008 | |
பின்னவர் | இராஜேஷ் முனாத் |
உணவு குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர், சத்தீசுகர் அரசு | |
பதவியில் 6 சூலை 2004 – 18 சூலை 2005 | |
விளையாட்டு இளைஞர் நலன் அமைச்சர், சத்தீசுகர் அரசு | |
பதவியில் 7 திசம்பர் 2003 – 18 சூன் 2005 | |
சட்டப் பேரவை உறுப்பினர் of சத்தீசுகர் சட்டப் பேரவை | |
பதவியில் 2000–2013 | |
பின்னவர் | அருண் வோரா |
தொகுதி | துர்க் நகரம் |
சட்டப் பேரவை உறுப்பினர்-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1998–2000 | |
முன்னையவர் | அருண் வோரா |
தொகுதி | துர்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பைக்காப்ரா, துர்க், மத்தியப் பிரதேசம், இந்தியா (தற்பொழுது-சத்தீசுகர், இந்தியா) | 1 திசம்பர் 1958
இறப்பு | 11 ஏப்ரல் 2018 தில்லி, இந்தியா | (அகவை 59)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | லீலா யாதவ் |
பிள்ளைகள் | 4 |
கேம்சந்த் யாதவ் (Hemchand Yadav, 1 திசம்பர் 1958 - 11 ஏப்ரல் 2018) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் 2003 முதல் 2013 வரை சத்தீசுகர் அரசில் அமைச்சராக இருந்தார்.
இளமை
[தொகு]யாதவ் துர்க்கில் சிறு விவசாயியான இராம்லால் யாதவுக்கு மகனாகப் பிறந்தார். இவர் 9 மார்ச் 1976-இல் லீலா யாதவை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள்; இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 1987-இல் அரசியலில் தீவிரமாக இறங்கினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]யாதவ் முதன்முதலில் 1998ஆம் ஆண்டு துர்க் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தனது காங்கிரசின் போட்டியாளரான அருண் வோராவை 3,279 வித்தியாசத்தில் தோற்கடித்து மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சத்தீசுகர் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பிறகு, இவர் 2003 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 22,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ராமன் சிங் அமைச்சரவையில் நீர்வளம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் கேபினட் அமைச்சரானார்.[1] நீர் வளங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், போக்குவரத்து,[2] உணவு, குடிமைப்பொருள் வழங்கல், உயர் & தொழில்நுட்பக் கல்வி போன்ற பல்வேறு துறைகளை 2013 வரை வகித்தார். இவரது நினைவாக கேமாசந்த் யாதவ் பல்கலைக்கழகம்தோற்றுவிக்கப்பட்டது.
மேலும் பார்க்கவும்
[தொகு]கேமாசந்த் யாதவ் பல்கலைக்கழகம், துர்க்