கெப்லர் முக்கோணம்
வடிவவியலில் கெப்லர் முக்கோணம் (Kepler triangle) என்பது ஒரு சிறப்பு வகையான செங்கோண முக்கோணமாகும். இம்முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்கள் பெருக்குத் தொடரில் அமைகின்றன. கெப்லர் முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்களின் விகிதங்கள், -தங்க விகிதத்துடன் தொடர்புடையது.
இப்பக்க நீளங்கள் பின்வருமாறு தரப்படுகின்றன:
- , அல்லது தோராயமாக, 1 : 1.272 : 1.618.[1] பக்க நீளங்களின் வர்க்கங்கள் தங்க விகிதத்தைப் பொதுவிகிதமாகக் கொண்ட பெருக்குத் தொடராக அமைகின்றன.
ஜெர்மானிய கணிதவியலாளர் மற்றும் வானவியலாளரான யோகான்னசு கெப்லர்தான் (1571–1630) முதன்முதலில் சில செங்கோண முக்கோணங்களின் சிறிய பக்கத்திற்கும் செம்பக்கத்திற்குமான விகிதம் தங்க விகிதத்திற்குச் சமமாக உள்ளதைக் கண்டறிந்தார்.[2] எனவே இத்தகைய செங்கோண முக்கோணங்கள் கெப்லர் முக்கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. கெப்லர் முக்கோணத்தில் பித்தாகரசு தேற்றம் மற்றும் தங்க விகிதம் ஆகிய இரண்டு முக்கிய கணிதவியல் கருத்துருக்களும் இணைந்து காணப்படுகின்றன. இந்த உண்மையால் ஈர்க்கப்பட்ட கெப்லர், இதனைப் பின்வருமாறு கூறுகிறார்:
வடிவவியலில் இரண்டு மாபெரும் பொக்கிஷங்கள் உள்ளன: ஒன்று பித்தாகரசின் தேற்றம்; மற்றொன்று ஒரு கோட்டினை இடை மற்றும் இறுதி விகிதமாகப் பிரித்தல். முதலாவதை ஒரு தங்க நிறையாகக் கொண்டால் பின்னது ஒரு விலைமதிப்பற்ற ஆபரணமாகும்.[3]
சில ஆதாரங்கள் தோராயமாக கெப்லர் முக்கோணத்தின் அளவுகளுக்குச் சமமான அளவுகளை உடையதொரு முக்கோணம் கீசாவின் பெரும்பிரமிடில் காணப்படுகிறதென கூறுகின்றன.[4][5]
வருவித்தல்
[தொகு]தங்க விகிதத்தை வரையறுக்கும் இருபடி பல்லுறுப்புக்கோவையான -ஐ
- என பித்தாகரசு தேற்றத்தின் முடிவின் வடிவில் மாற்றி எழுத, , மற்றும் பக்க அளவுகளுடைய முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம் என்பது தெளிவாகிறது.
கூட்டு, பெருக்கல் மற்றும் இசைச் சராசரிகளுடன் தொடர்பு
[தொகு]தரப்பட்ட இரு நேர்ம மெய்யெண்கள் a , b ஆகியவற்றின் கூட்டுச்சராசரி, பெருக்கல் சராசரி மற்றும் இசைச் சராசரிகளைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணம் ஒரு கெப்லர் முக்கோணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே அது ஒரு செங்கோண முக்கோணமாக இருக்க முடியும்.[6]
கெப்லர் முக்கோணம்- வரைதல்
[தொகு]கவராயம் மற்றும் அளவுகோல் கொண்டு ஒரு கெப்லரின் முக்கோணம் வரைவதற்கு முதலில் ஒரு தங்க செவ்வகத்தை வரைந்து பின் அதிலிருந்து கெப்ளர் முக்கோணம் வரையலாம்:
- சாதாரண சதுரம் ஒன்று வரைக.
- சதுரத்தின் ஒரு பக்கத்தின் நடுப்புள்ளியிலிருந்து எதிர்முனைக்கு ஒரு கோடு வரைக.
- இக்கோட்டுத்துண்டினை ஆரமாகக் கொண்டு வரையப்படும் வில்லானது செவ்வகத்தின் உயரத்தைத் தீர்மானிக்கிறது.
- தங்க செவ்வகத்தை முழுமையாக வரைக.
- தங்க செவ்வகத்தின் நீளமான பக்கத்தைக் கொண்டு வரையப்படும் வில் செவ்வகத்தின் எதிர்ப்பக்கத்தை வெட்டுமிடம் கெப்லர் முக்கோணத்தின் செம்பக்கத்தைத் தீர்மானிக்கிறது.
ஒரு கணிதவியல் ஒன்றுதல்
[தொகு]பக்கங்கள் கொண்ட ஒரு கெப்லரின் முக்கோணத்தை எடுத்துக் கொள்க.
- இம்முக்கோணத்தைச் சுற்றி வரையப்பட்ட வட்டம்;
- முக்கோணத்தின் மூன்று பக்கங்களில் இடைப்பட்ட அளவுடைய பக்க அளவை பக்கமாகக் கொண்டு வரையப்பட்ட சதுரம்.
- சதுரத்தின் சுற்றளவு () மற்றும் வட்டத்தின் சுற்றளவு () இரண்டும் 0.1% -க்கும் குறைவான பிழையளவில் ஒன்றுபடும்.
இதுவே கணிதவியல் ஒன்றுபடல், ஆகும். ஆனால் சதுரம் மற்றும் வட்டத்தின் சுற்றளவுகள் மிகச்சரியாக சமமாக இருக்க முடியாது. அதாவது ஒரு விஞ்சிய எண் என்பதால்
சில ஆதாரங்களின்படி[5][7], எகிப்திய பிரமிடுகளில் கெப்லர் முக்கோண வடிவங்கள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் பண்டைய எகிப்தியர்கள், மற்றும் தங்க விகிதம் இவற்றினைக் கொண்ட கணிதவியல் ஒன்றுபடுதலைப் பற்றி அறிந்திருக்காமல் இருந்திருக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roger Herz-Fischler (2000). The Shape of the Great Pyramid. Wilfrid Laurier University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0889203245.
- ↑ Livio, Mario (2002). The Golden Ratio: The Story of Phi, The World's Most Astonishing Number. New York: Broadway Books. pp. 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7679-0815-5.
- ↑ Karl Fink, Wooster Woodruff Beman, and David Eugene Smith (1903). A Brief History of Mathematics: An Authorized Translation of Dr. Karl Fink's Geschichte der Elementar-Mathematik (2nd ed. ed.). Chicago: Open Court Publishing Co.
{{cite book}}
:|edition=
has extra text (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ The Best of Astraea: 17 Articles on Science, History and Philosophy. Astrea Web Radio. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1425970400.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 "Squaring the circle, Paul Calter". Archived from the original on 2011-09-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-09.
- ↑ Di Domenico, Angelo, "The golden ratio—the right triangle—and the arithmetic, geometric, and harmonic means," The Mathematical Gazette 89, 2005.
- ↑ "The Great Pyramid, The Great Discovery, and The Great Coincidence, Mark Herkommer". Archived from the original on 2014-01-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-09.