உள்ளடக்கத்துக்குச் செல்

கெப்லர்-10பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்லர்-10பி
Kepler-10b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

புவியின் அளவுடன் கெப்லர்-10பி ஒப்பீடு
தாய் விண்மீன்
விண்மீன் கெப்லர்-10[1]
விண்மீன் தொகுதி டிரேக்கொ
வலது ஏறுகை (α) 19h 02m 43s
சாய்வு (δ) +50° 14′ 29″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 10.96
தொலைவு564 ± 88 ஒஆ
(173 ± 27 புடைநொடி)
அலைமாலை வகை G
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)0.0143 MJ
ஆரை(r)0.127 ± 0.0003 RJ
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.01684 AU
மையப்பிறழ்ச்சி (e) 0
சுற்றுக்காலம்(P)0.837495 நா
சாய்வு (i) 84.4°
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 2011-01-10
கண்டுபிடிப்பாளர்(கள்) பத்தாலா மற்றும் ஏனையோர்.
கண்டுபிடித்த முறை கடக்கும் முறை
(கெப்லர் விண்வெளித் திட்டம்)
கண்டுபிடிப்பு நிலை அறிவிப்பு

கெப்லர்-10பி (Kepler-10b) என்பது நாசாவின் கெப்லர் விண்வெளித் திட்டம் கண்டுபிடித்த பல புறக்கோள்களில் ஒன்றாகும். 2011 சனவரியில் இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளுள் மிகவும் சிறியதாகும். கெப்லர் திட்டம் கண்டுபிடித்த புறக்கோள்களில் இதுவே பாறைகளைக் கொண்டதும் ஆகும். 2009 மே முதல் 2010 சனவரி வரை சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து இந்த புறக்கோள் பற்றி அறியப்பட்டுள்ளது[2]. கெப்லர்-10பி புவியை விட 1.4 மடங்கு பெரியதாகும். புதன் கோளில் இருந்து சூரியனுகுள்ள தூரத்தை விட 20 மடங்கு குறைவான தூரத்தில் தனது சூரியனை இது ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வருகிறது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1600 கெல்வின் ஆகும்.

முக்கியத்துவம்

[தொகு]
Artist concept of Kepler 10b.

கெப்லர்-10பி புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டமை வேறு பல பாறைப் புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும், புவியை ஒத்த புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும் வழிவகுத்துள்ளதாக இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Summary Table of Kepler Discoveries". NASA. 2010-08-26. Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
  2. "NASA'S Kepler Mission Discovers Its First Rocky Planet". NASA. 2011-01-10. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-10பி&oldid=3551162" இலிருந்து மீள்விக்கப்பட்டது