கூல், பள்ளத்தாக்கு
கூல் பள்ளத்தாக்கு Gool Valley | |
---|---|
அடைபெயர்(கள்): குட்டி காசுமீர் | |
ஆள்கூறுகள்: 33°16′N 74°59′E / 33.26°N 74.99°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பிரதேசம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | இராம்பன் மாவட்டம் |
தாலுகா | கூல் |
ஏற்றம் | 1,421 m (4,662 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,315 |
இனங்கள் | கூலர், கூலி |
மொழிகள் | |
• அலுவல் | காசுமீரி மொழி, இந்தி,உருது,ஆங்கிலம், தோக்ரி மொழி[1][2] |
• பேச்சு | காசுமீரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 182144 |
கூல் பள்ளத்தாக்கு (Gool, Jammu and Kashmir) என்பது இந்தியாவின் சம்மு-காசுமீரில் உள்ள இராம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
மக்கள்தொகை
[தொகு]கூல் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை சுமார் 50,000 ஆகும்.
புவியியல்
[தொகு]இராம்பன் நகரத்திலிருந்து 52 கி. மீ தொலைவிலும், சம்மு மற்றும் சிறீநகர் பேருந்து நிலையத்திலிருந்து 180 கி. மீ. தொலைவிலும் செனாப் பள்ளத்தாக்கில் கூல் பள்ளத்தாக்கு நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் மலைகளால் சூழப்பட்டு சம்மு பிரிவில் உள்ளது. பசுமையான புல்வெளிகள், நீர் ஓடும் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் இந்த இடத்தின் இயற்கை சொத்துக்கள் ஆகும்.
பண்பாடு
[தொகு]இங்கு காசுமீரி மொழி முக்கியமாக பேசப்படுகிறது.
மகாபாரத காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் கோகரா கல்லி என்ற பண்டைய தளம் இங்கு உள்ளது.
மாபெரும் சிற்பங்களும் குதிரைகளும் பாண்டவர்களால் ஒரே கற்களால் செதுக்கப்பட்டன. இது மாநில தொல்லியல் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டக்கன் டாப் மற்றும் ராமகுண்டு ஆகியவை புல்வெளிகள் மற்றும் பசுமையான மேய்ச்சல் நிலங்களை வழங்கும் சுற்றுலாத் தலங்களாகும்.
ஆட்சி
[தொகு]2021 ஆம் ஆண்டில் மாவட்ட மேம்பாட்டு குழுவின் இராம்பனின் தலைவராக சம்சாதா சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டில் கூல் தொகுதியில் இருந்து மாவட்ட மேம்பாட்டு குழு உறுப்பினராக சகி முகமது தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டில் தொகுதி மேம்பாட்டு குழு தலைவராக சக்கீலா அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போக்குவரத்து
[தொகு]சம்முவிலிருந்து கூல், இராம்பன் முதல் கூல், சங்கல்டன் முதல் கூல் மற்றும் மகோர் முதல் கூல் வரை போக்குவரத்து சேவைகள் உள்ளன.
வரலாறு.
[தொகு]1997 ஆம் ஆண்டு சூன் 15 அன்று, மேல்நிலைப் பள்ளியின் முதல்வரான அசோக் ரெய்னா, இரண்டு ஆசிரியர்களுடன் எச். எம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். கல்வியை ஊக்குவிப்பதே அவர்களின் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இராம்பன் சம்பவம்
[தொகு]2013 ஆம் ஆண்டு சூலை 18 அன்று கூலின் தரம் பகுதியில் காசுமீர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டம் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மன்சூர் அகமது சான் மற்றும் இயாவேத்து மன்காசு உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி, 44 பேர் காயமடைந்தனர், இருப்பினும் ஆறு பேர் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்கள் கூறினர்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "BSF firing kills 4 in J&K after clash over prayer timing". Hindustan Times. 18 July 2013 இம் மூலத்தில் இருந்து 18 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130718182626/http://www.hindustantimes.com/News-Feed/JammuSec/Six--killed-in-BSF-firing-in-J-amp-K-s-Ramban-district/Article1-1094394.aspx.
- ↑ "Ramban firing: Curfew in major towns of Kashmir". @businessline. 19 July 2013. https://www.thehindubusinessline.com/news/national/ramban-firing-curfew-in-major-towns-of-kashmir/article20639207.ece1.