கூப்பரைட்டு
கூப்பரைட்டு | |
---|---|
துலாமீன் நதி, பிரின்சுடன், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் கிடைத்த மாதிரி | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | PtS (PdS, NiS) |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
இரட்டைப் படிகமுறல் | அரிதாக |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4–5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 9.5 |
அடர்த்தி | 9.5 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது), 10.2 கி/செ.மீ3 (கணக்கீடு) |
பலதிசை வண்ணப்படிகமை | புலப்படும்: வெள்ளை முதல் பாலேடு போன்ற வெள்ளை அல்லது நீல வெள்ளை |
Major varieties | |
படிவம் | சிதைந்த படிகத் துண்டுகள், 1.5மிமீ வரை ஒழுங்கற்ற மணிகள் |
கூப்பரைட்டு (Cooperite) என்பது (Pt,Pd,Ni)S என்ற பொது மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சாம்பல் நிறத்தில் காணப்படும் இக்கனிமத்தில் பிளாட்டினம், பலேடியம், நிக்கல் ஆகிய தனிமங்களின் சல்பைடுகள் சேர்ந்து காணப்படும். கூப்பரைட்டு இதே வகை கனிமமான பிராக்கைட்டு கனிமத்தின் ஈருருவத் திரிபாகும்.[1]. பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் கூப்பரைட்டு கனிமத்தை Cpe என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[2]
பிளாட்டினம் மற்றும் பலேடியம் போன்ற பிளாட்டினம் குழு உலோகங்களின் தாதுவாக வெட்டப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் குறைந்த அளவு மற்றும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள வாசிங்டன் மலைக்கு அருகே உள்ள பழைய சுரங்கத்தில் கிடைக்கிறது.[3]
கூப்பரைட்டு முதன்முதலில் 1928 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலுள்ள புசுவெல்ட்டு இக்னியசு வளாகத்தில் அக்னிப்பாறைகளிடையே ஊடுறுவலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க உலோகவியலாளரான இரிச்சர்டு ஏ. கூப்பரின் நினைவாக கூப்பரைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1][4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mindat mineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Cooperite (MinSocAm)" (PDF). MinSocAm Handbook of Mineralogy. Archived (PDF) from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
- ↑ Handbook of Mineralogy