உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டுறவு இயக்க வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைன் ஆற்றங்கரை நியூகாசில் நகரத்தின் பழமைமிக்க கூட்டுறவு சங்கக் கட்டிடம், ஐக்கிய ராச்சியம்

கூட்டுறவு இயக்க வரலாறு இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக கூட்டுறவு இயக்கமானது, ரோச்டேல் பயனீர் என்பவரால் சிந்திக்கப்பட்டு, 1844-ஆம் ஆண்டில் அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு, அந்த கூட்டத்தில் தாமே, தங்களுக்குள், தங்கள் தேவைக்காக தங்கள் மூலம் என்ற கொள்கைகளுடன் ரோச்டேல் சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு பண்டகசாலைகளை துவக்கினர். அக்கூட்டுறவு சங்கத்திற்கான நடைமுறை விதிகள் ஏற்படுத்திக் கொண்டனர். இக்கூட்டுறவு சங்கமே, பிற நாடுகளில் கூட்டுறவு சங்கங்கள் துவக்க முன்னோடியாக விளங்கியது.[1]

ஜெர்மனியில் 1852-ஆம் ஆண்டில் பிரான்ச் ஹெர்மன் சூல்ஸ் (Franz Hermann Schulze) என்பவரது முயற்சியால், நகர்ப் புறங்களில் சிக்கன நாணயக் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன. 1864-ஆம் ஆண்டில் ரெய்பிசன் (Raiffeisen) என்பவரது முயற்சியால் கிராமப்புறங்களில் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன. ரெய்பிசனின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மற்றும் பரஸ்பர சேமிப்பு கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டன. பிரான்சில் அச்சுத் தொழில் கூட்டுறவு சங்கங்களும், இஸ்ரேலில் கூட்டுறவு இயக்கம் கில்ப்லர்ட்ஸ், மோஸ்ஹவ், மோசர்ஷிட்டாப் போன்றவர்களால் முன்னடத்தப்பட்டது. இராபர்ட் ஓவன் மற்றும் வில்லியம் கிங் ஆகியவர்களின் முயற்சியால், ஐக்கிய அமெரிக்காவில் கூட்டுறவு இயக்கம் பரவத் தொடங்கியது.

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்

[தொகு]

பிரித்தானிய இந்தியாவில், ஆங்கிலேயர்கள் கூட்டுறவு இயக்கத்தை அறிமுகப்படுத்த, 1904-ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் சங்கங்கள் சட்டத்தை இயற்றியது. பின் கூட்டுறவு இயக்கத்தை நாடு முழுவதும் பரப்ப கூட்டுறவு சங்கங்களின் சட்டம்,1912 கொண்டு வந்தனர்.[2]

இந்திய விடுதலைக்குப் பின்னர் கூட்டுறவு இயக்கம் வளர்ந்த நிலையில், சுவாமிநாதன் மற்றும் வர்கீஸ் குரியன் ஆகியவர்களின் முயற்சியால் நாட்டில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி ஏற்பட்டது.[3]

கூட்டுறவு அமைப்புகளின் கிளைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறுவப்பட்டதால், இந்திய அரசு பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002 இயற்றியது.[4]

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம்

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தை பரப்ப 1932-ஆம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1932 மற்றும் 1934-ஆம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவு நிலவள கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1934 கொண்டு வந்தனர். இந்திய விடுதலைக்கு பின்னர், கூட்டுறவு சட்டங்கள் திருத்தப்பட்டு, 1961-ஆம் ஆண்டில் திருந்திய கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1961 மற்றும் விதிகள் அமல் படுத்தப்பட்டது.[5] ஒரே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் இருந்த அனைத்து கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்கள், வேளாண்மைச் சங்கங்கள், நகர வங்கிகள், நிலவள வங்கிகள் தவிர, பிற வகையான கூட்டுறவுச் சங்கங்கள், அவ்வமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் தலைமையில், கூட்டுறவுச் சங்க பதிவாளரின் அதிகாரங்களுடன் செயல்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் தரத்தை மேலும் வலுப்படுத்த, 1983-ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள், 1988 தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. David Thompson (July–Aug 1994). "Cooperative Principles Then and Now". Co-operative Grocer (National Cooperative Grocers Association, Minneapolis) இம் மூலத்தில் இருந்து 2007-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071010012855/http://cooperativegrocer.coop/articles/index.php?id=158. பார்த்த நாள்: 2008-06-26. 
  2. central act
  3. M. S. Swaminathan
  4. The Multi-State Cooperative Societies Act, 2002
  5. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1961
  6. "THE TAMIL NADU CO-OPERATIVE SOCIETIES ACT, 1983". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுறவு_இயக்க_வரலாறு&oldid=3726676" இலிருந்து மீள்விக்கப்பட்டது