உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டன்பர்கு விவிலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூயார்க் பொது நூலகத்தில் உள்ள கூட்டன்பர்க் விவிலிய நூல்

கூட்டன்பர்கு விவிலியம் (Gutenberg Bible) என்பது ஐரோப்பாவில் நகரும் உலோக அச்சு மூலம் அச்சிடப்பட்ட ஆரம்பகால நூல்களில் ஒன்றாகும். இந்நூல் வெளியீடு "கூட்டன்பர்கு புரட்சி"யின் ஆரம்பமாகவும், மேற்குலகின் அச்சு நூல்களின் ஆரம்ப காலம் எனவும் எனக் கருதப்படுகிறது. இந்நூல் அதன் உயர்ந்த அழகியல் மற்றும் கலை அம்சங்களுக்காகப் பரவலாக பாராட்டப்பட்டது.[1] இந்நூல் 1450களில் யோகான்னசு கூட்டன்பர்கு என்பவரால் மைன்சு நகரில் (இன்றைய செருமனியில்) இலத்தீன் மொழியில் அச்சிடப்பட்டது. இந்நூலின் 49 பிரதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்நுல்கள் உலகின் மிகவும் பெறுமதியான நூல்களில் ஒன்றாகக் கருதப்பட்டிருந்தாலும், 1978 இற்குப் பின்னர் இதன் முழுமையான பிரதி எதுவும் விற்பனை செய்யப்படவில்லை[2][3] 1455 ஆம் ஆண்டு மார்ச்சில், பின்னாளைய திருத்தந்தை இரண்டாம் பயசு பிராங்க்ஃபுர்ட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நூலின் பக்கங்களைத் தாம் கண்டதாக எழுதியிருந்தார். இதன் எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன எனபது குறித்த தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை. 1455 இல் வெளியான தகவல்களின் படி, 158 முதல் 180 பிரதிகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Davies, Martin (1996). The Gutenberg Bible. British Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7123-0492-4.
  2. MSNBC: In the book world, the rarest of the rare
  3. Luxist.com: The World of Rare Books: The Gutenberg Bible, First and Most Valuable பரணிடப்பட்டது 2013-04-10 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டன்பர்கு_விவிலியம்&oldid=3241246" இலிருந்து மீள்விக்கப்பட்டது