கூடமலை
Appearance
கூடமலை தமிழ்நாடு, சேலம் மாவட்டம்]], கங்கவள்ளி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த ஊரைச் சுற்றிலும் மலைகள் அமைந்து உள்ளதால் இவ்வூருக்கு ”கூடுமலை” என்றும், ”கூடாமலை” என்றும் கூறுவர். நாளடைவில் இப்பெயர்கள் மருவி ”கூடமலை” எனப் பெயர் பெற்றது என்பர். இந்தக் கிராமத்தில் ”சுவேதநதி” என்ற நதி பாய்கிறது. இந்த ஊர் வேளாண்மைக் கிராமம் ஆகும்.