உள்ளடக்கத்துக்குச் செல்

கூகுள் பேஜ் கிறியேட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கூகிள் பேஜ் கிறியேட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூகிள் பேஜ் கிரியேட்டர்
உருவாக்குனர்கூகிள்
இயக்கு முறைமைஏதாவது (இணையமூடான பிரயோகம்)
மென்பொருள் வகைமைபல்லூடக இணையப் பிரசுரிப்பு
இணையத்தளம்pages.google.com

கூகிள் பேஜ் கிரியேட்டர் கூகிள் ஆய்வுகூடத்திலிருந்து பெப்ரவரி 23, 2006 இலிருந்து சோதனை நிலையிலிருக்கும் சேவையாகும். இது ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் இலகுவாக இணையப் பக்கங்களை உருவாக்கப் பயன் படுகின்றது. இன்னமும் இதன் இறுதிப் பதிப்பிற்கான திகதி அறிவிக்கப்படவில்லை.

இது பார்ப்பதையே பெறும் (en:WYSIWYG) இடைமுகத்தை அளிக்கின்றது. இதில் பயனர்கள் 100 MB அளவான இடவசதியுடன் வலைப் பாவனையையும் பெறுவர்.

கூகிள் பேஜ் இணையப் பக்கமானது உருவாக்கப் பட்டதும் http://username.googlepages.com பரணிடப்பட்டது 2006-03-03 at the வந்தவழி இயந்திரம் என்ற முகவரியில் தோற்றமளிக்கும்.

வசதிகள்

[தொகு]
  • தானாகவே சேமித்தல் - ஜிமெயில் போலவே காலத்துக் காலம் தானாகவே உருவாக்கப்படும் பக்கங்களை சேமிக்கும்.
  • 41 வகையான இணையப் பக்க மாதிரிகள் மூலம் பக்கங்களை வடிவமைக்கும் வசதி
  • 4 விதமான பக்க வடிவமைப்பு
  • பேஜ் கிரியேட்டர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான HTML மற்றும் CSS நிரல்களை ஆக்கும் வசதி.
  • ஜாவாஸ்கிரிப்ட் வசதி
  • பல இணையத்தளங்கள் போன்றல்லாது *.exe கோப்புக்களையும் ஆதரிக்கின்றது.
  • மேலேற்றம் செய்யும் கோப்பு ஒன்றின் அதிகபட்ட அளவு 10 மெகாபைட், கோப்பின் அளவு கூடுதலாக இருந்தால் Winrar போன்ற மென்பொருட்களூடாக கோப்பை பிரித்துப் பதிவேற்றலாம்.
  • HTML நெரடியாக எழுத வசதியில்லாவிட்டாலும் view Source என்பதைத் தெரிவு செய்து மாறறங்கள் செய்யலாம் அல்லது கணினியில் இதை உருவாக்கிவிட்டு இதை மேலேற்றம் செய்து கொள்ளலாம்.

குறைகள்

[தொகு]

கூகிள் பேஜ் மின்னஞ்சல் பக்கத்தை இணையப் பக்கத்திற்குப் பயன்படுத்துவதால் குப்பை அஞ்சல்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_பேஜ்_கிறியேட்டர்&oldid=4172678" இலிருந்து மீள்விக்கப்பட்டது