கு. திருப்பதி
கு. திருப்பதி | |
---|---|
தொகுதி | மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மதுரை மாவட்டம், தமிழ்நாடு | ஆகத்து 9, 1930
இறப்பு | செப்டம்பர் 30, 2015 மதுரை | (அகவை 85)
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | மல்லிகா |
வேலை | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
கு. திருப்பதி (ஆகத்து 9, 1930 - செப்டம்பர் 30, 2015) தமிழக அரசியல்வாதி ஆவார்.
இவர் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் குழந்தைவேல் பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் 1971-இல் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2] மதுரையைச் சேர்ந்த இவர் மதுரைக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்று, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். அரசியலுக்கு வரும் முன் வழக்கறிஞராக பணியாற்றினார்.
செப்டம்பர் 30, 2015-ல் மாலை சுமார் 6.30 மணியளவில் காலமானார்.[3][4][5] திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர், கு. திருப்பதி க்கான இரங்கல் செய்தியை முரசொலி பத்திரிகையில் தெரிவித்தார்.[6] இவரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 ஆம் தேதி ஜனவரி மாதம் 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
- ↑ 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ தினத்தந்தி செய்தித்தாள்
- ↑ முரசொலி செய்தித்தாள்
- ↑ "தினமலர் செய்தித்தாள்". Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.
- ↑ திமுக தலைவர் கலைஞர், கு. திருப்பதி க்கான இரங்கல் செய்தியை முரசொலி பத்திரிகையில் தெரிவித்தார்
- ↑ "தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கற் குறிப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-23.