குஸ்டாவோ குட்டியரஸ்
குஸ்டாவோ குட்டியரஸ் Gustavo Gutiérrez | |
---|---|
![]() 2007 இல் குஸ்டாவோ குட்டியரஸ் | |
பிறப்பு | Gustavo Gutiérrez-Merino Díaz 8 சூன் 1928 லிமா, பெரு |
இறப்பு | 22 அக்டோபர் 2024 லிமா, பெரு | (அகவை 96)
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | |
பணியகம் |
|
அறியப்படுவது |
|
குறிப்பிடத்தக்க படைப்புகள் | விடுதலையின் இறையியல் |
விருதுகள் |
|
Ecclesiastical career | |
சமயம் | கிறித்தவம் |
கோவில் | கத்தோலிக்க திருச்சபை |
திருநிலைப்படுத்தியது | 1959 |
சேவையாற்றிய சபைகள் | இக்லேசியா கிறிஸ்டோ ரெடென்டர், ரிமாக் |
குஸ்டாவோ குட்டியரஸ்-மெரினோ டியாஸ் (Gustavo Gutiérrez-Merino Díaz, 8 யூன் 1928 - 22 அக்டோபர் 2024) என்பவர் தென் அமெரிக்காவின் பெருவைச் சேர்ந்த மெய்யியலாளர், கத்தோலிக்க இறையியலாளர் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விடுதலை இறையியலின் நிறுவனர்களில் ஒருவரான தொமினிகன் பாதிரியார் ஆவார். [1] 1971 ஆண்டு இவர் எழுதிய புத்தகமான விடுதலையின் இறையியல் என்பது விடுதலை இறையியலின் தோற்றத்திற்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவர் நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் ஜான் கார்டினல் ஓ'ஹாரா இறையியல் பேராசிரியராக இருந்தார். மேலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியராக இருந்தார். [2]
குட்டிரெஸ் பாதிரியாராக முடிவெடுப்பதற்கு முன்பு சான் மார்கோசின் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் இலக்கியம் பயின்றார். இவர் பெல்ஜியத்தில் உள்ள லுவென் மற்றும் பிரான்சின் லியோனில் உள்ள இறையியல் பீடத்தில் இறையியல் படிக்கத் தொடங்கினார்.
இரட்சிப்பு, விடுதலை ஆகியவற்றை இணைத்த இவரது இறையியல் கவனம், ஏழைகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்தது. புவியில் இறையரசைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை புறக்கணித்து, இறை வெளிப்பாடு மற்றும் கிறிஸ்தவ அறுதிவிளைவியல் மிகைப்படுத்தப்பட்ட இலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்று குட்டியர்ரெஸ் கூறினார். [3] லத்தீன் அமெரிக்காவில் வறுமைக்குக் காரணம் என்று இவர் நம்பிய சமூக மற்றும் பொருளாதார அநீதியையும், கத்தோலிக்க மதகுருமார்களையும் அவரது வழிமுறை பெரும்பாலும் விமர்சித்தது. அவரது பணியின் மையக் கேள்வியானது "ஏழைகளுக்கு கடவுள் அவர்களை நேசிக்கிறார் என்பதை நாம் எவ்வாறு தெரிவிப்பது?" என்பதாகும். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Usarski, Frank, தொகுப்பாசிரியர் (July 2021). "The Solved Conflict: Pope Francis and Liberation Theology". International Journal of Latin American Religions (பெர்லின்: Springer Nature) 5 (2): 287–314. doi:10.1007/s41603-021-00137-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:2509-9957. https://link.springer.com/content/pdf/10.1007/s41603-021-00137-3.pdf.
- ↑ "Gustavo Gutierrez, O.P." Department of Theology: People. University of Notre Dame. Retrieved 1 September 2010.
- ↑ Müller, Gerhard. ""La teología de la liberación hoy"". In Gutiérrez (ed.). Iglesia pobre y para los pobres. Lima.
- ↑ Gutiérrez, Gustavo (1995). Hablar de Dios desde el sufrimiento del inocente. Una reflexión de el libro de Job. Lima: Instituto Bartolome de Las Casas. ISBN 978-8430120871.