குவாசி தீன் முகமது
குவாசி தீன் முகம்மது | |
---|---|
কাজী দীন মোহাম্মদ | |
நிறுவனர் இயக்குநர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூரோசயின்சஸ் மற்றும் மருத்துவமனை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் செப்டம்பர், 2012 | |
President | |
வங்கதேச மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சையாளர்களின் கல்லூரி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச், 2019 | |
முன்னையவர் | கனக் கன்டி பாருவா |
முதல்வர் | |
தாக்கா மருத்துவக் கல்லூரி | |
முன்னையவர் | எம். ஏ. பாயிசு |
பின்னவர் | முகம்மது இசுமாயில் கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லக்ஷ்மிபூர், பரித்பூர், வங்கதேசம் |
முன்னாள் கல்லூரி | தாக்கா மருத்துவக் கல்லூரி |
வேலை | மருத்துவர், கல்விக்கூடம், ஆய்வு, கல்வியியல் நிர்வாகம் |
குவாசி தீன் முகமது (Quazi Deen Mohammad) ஒரு வங்காளதேச மருத்துவர், கல்வியாளர் மற்றும் நரம்பியல் நிபுணர் ஆவார். இவர் டாக்காவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸின் நிறுவன இயக்குனர் ஆவார். [1] [2] இவர் டாக்கா மருத்துவக் கல்லூரியின் 37ஆவது முதல்வராகவும் [3] மற்றும் பங்களாதேஷ் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியின் (BCPS) 19 ஆவது தலைவராகவும் இருந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]குவாசி தீன் முகமது அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் உள்ள வங்காளதேசத்தின் ஃபரித்பூரில் உள்ள லக்ஷ்மிபூரில் பிறந்தார். இவர் ஃபரித்பூர் ஜில்லா பள்ளியில் இடைநிலைக் கல்வியையும் மற்றும் அரசு ராஜேந்திரா கல்லூரியில் மேல்நிலைக் கல்வியையும் தேர்ச்சி பெற்றார். இவர் 1978 ஆம் ஆண்டில் டாக்கா மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். இவர் 1983 ஆம் ஆண்டில் வங்காளதேச மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை கல்லூரியில் மருத்துவத்தில் தகுதித்தேர்வை முடித்தார். இவர் 1989 ஆம் ஆண்டில் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் மேடிசன், மருத்துவ நரம்பியல் இயற்பியலில் தகுதிப்படிப்பை நிறைவு செய்தார். இவர் 1994 ஆம் ஆண்டில் [4] பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]குவாசி தீன் முகமது, 1984 ஆம் ஆண்டில் இப்போது பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் அப்போதைய ஐபிஜிஎம்ஆரில் நரம்பியல் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் டாக்கா மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் பேராசிரியராக சேர்ந்தார். பின்னர், டாக்கா மருத்துவக் கல்லூரியின் முதல்வராக 2004 முதல் 2012 வரை பணியாற்றினார். பின்னர், அவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸின் நிறுவன இயக்குநரானார். அவர் தனது நோயாளிகளுக்கு எஸ்பிஆர்சி & நரம்பியல் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். [5]
ஆராய்ச்சி நடவடிக்கைகள்
[தொகு]- தலைவர், நரம்பியல் ஆராய்ச்சி மையம், என்ஐஎன்எஸ்
- ஆலோசகர், நரம்பியல் ஆசியா, மலேசியா
- பிஐ, அனெக்சான் 005 மருத்துவ சோதனை (ஜிபிஎஸ்ஸில் C1q அடக்கி) வங்கதேசத்தில்
- பிஐ, சமூக ஆய்வு பக்கவாதம், கால்-கை வலிப்பு, மறதி நோய் நியூரோடிஜெனரேட்டிவ் நோய் குறிப்பாக மோட்டார் நியூரான் நோய் மற்றும் பார்கின்சன் நோய் பற்றிய என்ஐஎன்எஸ் மற்றும் சிட்ரான் ( செஃப்பீல்ட் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் ) இடையேயான கூட்டு ஆய்வில் மூத்த பங்களிப்பாளர்.
- NINS மற்றும் Erasmus MC ( நெதர்லாந்து ), CDC Atlanta (US) Annexon (US) மற்றும் ICDDR,B ஆகியவற்றுக்கு இடையேயான பல்வேறு கூட்டு ஆய்வில் மூத்த பங்களிப்பாளர்
வெளியீடுகள்
[தொகு]இவர் “கால்- கை வலிப்பு- நம்பிக்கைகள் மற்றும் தவறான நம்பிக்கைகள்”- என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியிதழில் எழுதியுள்ளார். [6] தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பத்திரிகைகளில் 186 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- ஹாரரரி பெல்லோஷிப், காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் அண்ட் சர்ஜன்ஸ் பாக்கிஸ்தான்
- பேராசிரியர் இப்ராஹிம் நினைவு தங்கப் பதக்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Institute of Neurosciences and Hospital – NINS | ShopnoBaz". shopnobaz.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.
- ↑ "Home". www.nins.com.bd (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2017-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.
- ↑ Uddin, Muhammad Helal. অধ্যাপক ডা. কাজী দীন মুহাম্মদ. ncdcenter.com (in Bengali). Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.
- ↑ "Director". www.nins.gov.bd. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
- ↑ "Dr. Quazi Deen Mohammad Chamber". Doctor Bangladesh.
- ↑ "www.ethicsclub.org -". www.ethicsclub.org. Archived from the original on 2017-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.