குழி முயல்
குழி முயல் | |
---|---|
European Rabbit (Oryctolagus cuniculus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | லெப்போரிடே
in part |
Genera | |
Pentalagus |
குழி முயல் (Rabbit) உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டி விலங்காகும். குடும்பமாக வாழும் இவை தாவர உண்ணிகளாகும். இவை நான்கு முதல் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இறைச்சிக்காகப் பண்ணைகளிலும் செல்ல விலங்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் காதுகள் இவற்றை குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.[1]
ஆண் முயலினை "பக்" (buck) என்றும் பெண் முயலினை "டோ" (Doe) என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.
வாழ்விடம்
[தொகு]முயல்கள் சமவெளிக் காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் மற்றும் பாலை நிலங்களில் வாழும் விலஙகினமாகும். முயல்கள் கூட்டமாக வாழ்பவை. வட அமெரிக்கவில் முயல்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. முயல்கள் ஐரோப்பியா, தென்மேற்கு ஆசியா, சுமத்ரா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஜப்பானின் சில தீவுகளைப் பிறப்பிடமாக கொண்டுள்ளன. முயல்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்பவை என்பதால் இவை பல நாடுகளில் வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன. முயல்களின் ஒருநாள் சராசரி உறங்கும் நேரம் 8.4 மணிநேரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rabbit Habitats". Archived from the original on 2009-08-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.