குழல் உமிழ்நீர்ச் சுரப்பி
குழல் உமிழ்நீர்ச் சுரப்பிகள் (Tubarial salivary gland) என்று அழைக்கப்படும் குழல் சுரப்பிகள் மனிதர்களில் காணப்படும் ஓர் இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகும். மனிதர்களில் நாசி குழிக்கும் தொண்டைக்கும் இடையில் இவை காணப்படும்.[1]
விளக்கம்
[தொகு]குழல் உமிழ்நீர்ச் சுரப்பிகள் நாசிப்பகுதித் துருத்தம் மேலுள்ள உள்ள மூக்குத் தொண்டைக்குழாயின் பக்கவாட்டு சுவர்களில் காணப்படுகின்றன [2][1][3] இதன் காரணமாக இச்சுரப்பிகள் குழல் சுரப்பிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த உமிழ்நீர்ச் சுரப்பு முன்னிற்குஞ்சுரப்பி படல புரதத்துடன் இணைகின்றன. இதன் அடிப்படையிலே இந்த சுரப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.[4]
வரலாறு
[தொகு]நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தில் இடச்சு விஞ்ஞானிகள் குழு ஒன்று பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்/வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவியினை பயன்படுத்தி 2020 செப்டம்பரில் இந்த சுரப்பிகளைக் கண்டுபிடித்தனர்.[3][5][6]
முக்கியத்துவம்
[தொகு]கதிரியக்கச் சிகிச்சையில் குழாய் சுரப்பிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சுரப்பிகளின் கதிர்வீச்சைத் தவிர்ப்பது, வாய் வறட்சி போன்ற கதிர்வீச்சு சிகிச்சையின் பல பக்க விளைவுகளைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.
சர்ச்சை
[தொகு]இந்த உறுப்பு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கூற்று உடற்கூறியல் நிபுணர்களால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hunt, Katie; Rogers, Kristen (October 21, 2020). "Scientists discover possible new organ in the human throat". CNN. https://www.cnn.com/2020/10/21/health/new-organ-throat-scn-wellness/index.html.
- ↑ Pacha, Aswathi (October 22, 2020). "New pair of salivary glands in humans discovered". The Hindu. https://www.thehindu.com/sci-tech/science/new-pair-of-salivary-glands-in-humans-discovered/article32915485.ece.
- ↑ 3.0 3.1 Valstar, Matthijs H.; de Bakker, Bernadette S.; Steenbakkers, Roel J.H.M.; de Jong, Kees H.; Smit, Laura A.; Klein Nulent, Thomas J.W.; van Es, Robert J.J.; Hofland, Ingrid et al. (2020). "The tubarial salivary glands: A potential new organ at risk for radiotherapy". Radiotherapy and Oncology 154: 292–298. doi:10.1016/j.radonc.2020.09.034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0167-8140. பப்மெட்:32976871.
- ↑ Pappas, Stephanie (20 October 2020). "Scientists discover new organ in the throat". livescience.com (in ஆங்கிலம்). Retrieved 2021-01-06.
- ↑ Dockrill, Peter (20 October 2020). "Scientists Just Discovered a Mysterious Organ Lurking in The Centre of The Human Head". ScienceAlert.
- ↑ Netherlands Cancer Institute (October 16, 2020). "Cancer researchers discover new salivary gland". Medical Xpress.
- ↑ "Observations against the recent discovery of a new pair of salivary glands in humans".