குழந்தை சுரண்டல்
Appearance
குழந்தை சுரண்டல்
குழந்தை ஈடுபடும் பணிகளில் உழைப்பு சுரண்டலோ, பாலியல் சுரண்டலோ இருக்குமேயானால் அது கல்வி பயில இடையராக அமையும். அக்குழந்தை சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது.
குழந்தைகள் என்பவர் யார்?[தொகு]
சாதி, மதம்,பால், மொழி, சொத்து, நிறம், பிறப்பு, ஊனம் போன்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி 18 வயதிற்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகள்.
குழந்தை உரிமைகள் மீதான ஐ.நா.உடன்படிக்கை:-[தொகு]
1989-நவம்பர் மாதம் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை ஐ.நா.சபை அறிவித்தது. 54~ரத்துக்களை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும். 1992-டிசம்பர் மாதம் நம் நாடும் ஐ.நா.உடன்படிக்கையில் கையொப்பமிட்டு நம் குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்க பொறுப்பேற்றது. குழந்தைகளுக்கு வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சி உரிமை,பங்கேற்பு உரிமை உள்ளது.
குழந்தை சுரண்டல் முறைகள்:-[தொகு]
- அடமானம் வைத்தல்
- பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல்
- ஆபாச படங்கள் எடுக்க பயன்படுத்துதல்
- பிச்சை எடுக்க வைத்தல்
- ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்துதல்
- முழுநேர வீட்டு வேலை
- பண்ணை சார்ந்த வேலைகள்
- சிறுதொழில் மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுத்தல்
குழந்தை சுரண்டல் - பாதிப்பு[தொகு]
- குழந்தை பருவம் சுதந்திரம் பறிபோதல்
- தனிமை நிலை
- உடல் பாதிப்பு
- பாலியல் துன்புறுத்தல்
- பெரியோரின் துன்புறத்தல்
- நோய் தாக்கம்
- உழைப்பு சுரண்டல்
- குழந்தை கடத்தல்
குழந்தை பாதுகாப்பு சட்டம்:-[தொகு]
- அரசியல் அமைப்பு சாசனத்தின் 14-வது கோட்பாடு சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
- 15-வது கோட்பாட்டின்படி எந்த ஒரு குழந்தையையும் பாகுபடுத்தக் கூடாது.
- சுரண்டப்படுதல்.பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படுதலிலிருந்து காப்பாற்ற 30-ன் பிரிவுகள் இ.எப்
- 24-வது கோட்பாட்டின்படி 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளில் அனுமதிக்கக்கூடாது.
- 21யு-யின்படி 6 முதல் 14 வயது வரை கட்டாய இலவச கல்வி.
- ↑ குழந்தைப்பாதுகாப்பு மற்றும் பெண்கள் கடத்தலை தடுத்தல்-கிராமக்கண்காணிப்பு குழுவிற்கான கையேடு,யுனிசெப்